பக்கம் எண் :

சீறாப்புராணம்

904


இரண்டாம் பாகம்
 

வார்த்தைகளின் றன்மையினால் அன்பினது சினேகமே யன்றிப் பழமையை யுடைய யாதொரு விரோதமு மில்லை.

 

2442. வரமுறுஞ் செல்வநும் வசனத் தாலெமர்க்

     குரியவ ரியாவரு முரைத்த வாய்மையும்

     பெருகிய கிளையெனுந் துடரும் பேரற

     முரணொடு மன்பற முறிக்க வேண்டுமால்.

32

      (இ-ள்) வரத்தைப் பொருந்திய செல்வத்தை யுடைய நபிகட் பெருமானே! இப்போது இங்கு பேசப்பட்ட நுமது வார்த்தைகளினால் எம்மவர்களுக்குச் சொந்தமான மனிதர்களியாவரும் முன்னர் கூறிய உறுதி வார்த்தைகளையும் அதிகரித்த பந்துத்துவ மென்னுந் தொடர்பையும் கீர்த்தி யான தற்றுப் போகும் வண்ணம் மாறுபாட்டுடன் நேசமற முறித்தல் வேண்டும்.

 

2443. மறைமொழி குறித்துத்தீன் வழிம றாதிவண்

     குறைசிக ளொடும்பகை கொள்ளுங் காலையி

     லுறமுறை யென்றும துளமி ரங்குமேற்

     பிறமொழி யெடுத்தெவர் பேச வல்லரே.

33

      (இ-ள்) புறுக்கானுல் அலீ மென்னும் வேத வசனத்தை மனத்தின் கண் குறிப்பிட்டுத் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினது வார்த்தைகளை மாறாது இவ்விடத்திலுள்ள குறைஷிக் குலத்தார்களுடன் விரோதத்தைக் கொள்ளும்போது அந்தக் குறைஷிகள் உங்களது உறவின் முறைமையர்க ளென்று உங்களின் மனமானது இரங்குமே யானால் அஃதாகா தென்ற பிற வார்த்தைகளை எடுத்து உங்களுக்குச் சொல்லுந் தைரியத்தையுடையவர்கள் யாவர்? ஒருவரு மில்லர்.

 

2444. இனையன பலமொழி கைத மென்பவர்

     மனநிலை தெளிதர வகுத்துக் காட்டலும்

     நனிமுறு வலின்முகம் மதுநன் மாமறைப்

     புனைதரு நாவினாற் புகல்வ தாயினார்.

34

      (இ-ள்)் கைத மென்னு மபிதானத்தை யுடையவர் இப்படிப்பட்ட பல பேச்சுகளை நபிகட் பெருமானவர்களின் இதயத்தினது நிலைமையானது விளங்கும் வண்ணம் சொல்லிக் காட்டிய மாத்திரத்தில் மிகுத்த புன்னகையோடும் நாயகம் அந் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் நன்மை பொருந்திய மகத்தான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை அலங்கரித்துக் கூறும் நாக்கினாற் சொல்லத் தொடங்கினார்கள்.