பக்கம் எண் :

சீறாப்புராணம்

914


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) முறிந்து விழா நிற்கும் அலைகளை யுடைய கீழ்பாற் சமுத்திரத்தின் கண் சூரிய னானவன் தோற்றமாக உதய வேளையில் திருமக்கமா நகரத்தின் கண்ணுள்ள குறைஷிகளாகிய வயவர்கள் எல்லை மீறிய வார்த்தைகளோடும் திரு மதீனமா நகரத்தினது அரசர்களை நெருங்கி விரைவில் இவ்விடத்திற் கூட்டிக் கொண்டு வருவீர்களாக வென்று ஒற்றர்களை விடுத்துக் கூப்பிட்டார்கள்.

 

2473. உலவு நீள்கொடி மதீனமா நகரினி லுறைந்த

     தலைவ ரிற்சில காபிர்க டமைவிளித் திரவி

     னலித லன்றியோர் கூக்குரல் கேட்டனம் நடுவு          

     நிலைமை யற்றசொற் கேளுதி ரெனநிகழ்த் துவரால்

8

      (இ-ள்) நீண்ட கொடிகளானவை யுலாவா நிற்குந் திரு மதீனமா நகரத்தின் கண் தங்கிய தலைமைத் தனத்தை யுடையவர்களிற் சில காபிர்களை அவ்வாறு கூப்பிட்டு இன்றைய இரவில் யாங்கள் யாவர்களும் வாட்டமின்றி ஓர் சத்தத்தைக் காதுகளினாற் கேள்வியுற்றோம். அந்த நீதியற்ற வார்த்தைகளை நீங்கள் கேளுங்க ளென்று சொல்லுவார்கள். 

 

2474. மதீன மன்னவ ரடங்கலு முகம்மது தனக்கு

     முதிய சத்தியஞ் செய்தவன் தீனிலை முயன்று

     பதியி னிற்கொடு போயெம ருடன்பகை விளைப்பப்

     புதிய மாற்றமு முடித்தன ராமறைப் பொருட்டால்.

9

      (இ-ள்) திரு மதீனமா நகரத் தரசர்க ளியாவரும் முகம்மதென்பவனுக்கு முற்றிய சத்தியத்தைச் செய்து கொடுத்து அவனுடைய தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமையில் முயற்சித்து அவனைத் தங்களின் நகரத்தின் கண் கூட்டிக் கொண்டு போய் அவனது வேதத்தின் காரணத்தினால் எம்மவர்களுடன் போர்ச் செய்ய நூதன மாகிய வார்த்தைகளையும் பேசி முடித்தார்களாம். 

 

2475. ஈது வந்ததென் னெமர்க்கிடர் நினைத்ததென் னிணங்காச்

     சூதன் றன்னொடு பொருந்திய வாறதென் றொலையாப்

     பாத கப்பழிக் கடியிட முடித்ததென் பகர்ந்தீ

     தோதக் கேட்டெவர் மனங்கொள்வர் நகைக்குமிவ் வுலகே.

10

     (இ-ள்) இந்தச் சமாச்சாரம் வந்த தென்னை? எம்மவர்களுக்கு அந்தத் திரு மதீனமா நகரத்தார்கள் துன்பத்தைச் சிந்தித்த தென்னை? பொருந்தாத பொய்யனாகிய அந்த முகம்மதென்பவனுடன் பொருந்திய மார்க்க மென்னை? நீங்காத துரோகத்தினது நிந்தை வார்த்தைகளுக்கு முதன்மையான இடம்பாட்டைப் பேசி முடிவு செய்த தென்னை? இஃதைச்