பக்கம் எண் :

சீறாப்புராணம்

915


இரண்டாம் பாகம்
 

சொல்லக் கேள்வி யுற்று மன மானது ஏற்றுக் கொள்ளப் பெறுவார் யாவர்? இந்த வுலக மானது இதனால் அவர்களை நிந்தியா நிற்கும்.

 

2476. இந்த வாறுமெய் யெனில்கசு றசுவெனு மினமுஞ்

     சிந்தெ னப்பெரு கௌசெனுங் குலத்தவர் திரளு

     நந்து வெம்பகை முடித்திட மக்கமா நகரில்

     வந்த தல்லது நல்வினைக் கலவென வகுத்தார்.

11

      (இ-ள்) இந்தப் படி பேசி முடித்தது சத்திய மென்றால் கசுறஜூ வென்று கூறுங் கூட்டமும் சமுத்திரத்தைப் போலும் அதிகரித்த அவுசென்னுங் குலத்தவர்களின் கூட்டமும் இந்தத் திரு மக்கமா நகரத்தின் கண் வந்தது நிந்தையைத் தருகின்ற கொடிய விரோதத்தை முடிக்கவே யல்லாமல் நற் செய்கைக் கல்ல வென்று வகுத்துச் சொன்னார்கள்.

 

2477. மாட மோங்கிய மக்கமன் னவர்வகுத் துரைப்பக்

     கேடி லாமதீ னத்துரை காபிர்கள் கேட்டுக்

     கூடு மெம்மினத் தவர்களி லிதிலொரு குறிப்பும்

     நாடு வாரில ரென்கொலோ நீர்நவின் றதுவே.

12

      (இ-ள்) உப்பிரிகைக ளோங்கப் பெற்ற திரு மக்கமா நகரத்தினது அரசர்கள் அவ்வாறு வகுத்துச் சொல்ல, குறைவில்லாத திரு மதீனமா நகரத்தின் கண் தங்கிய காபிர்கள் கேள்வி யுற்று இங்கு கூடிய எமது கூட்டத்தார்களில் நீங்கள் சொல்லிய இந்த வார்த்தைகளில் நின்றும் யாதொரு நினைப்பையும் நாடுவா ரொருவரு மில்லர். நீங்கள் கூறியது என்னை.

 

2478. சமய பேதக முகம்மதென் பவன்றனை விளித்தோ

     ரிமைநொ டிப்பொழு தடுத்திருந் தறிகில மியாங்க

     ளுமைம றுத்தவர்க் குண்மைக ளுரைப்பதெவ் வழியெம்

     மமைதி யுற்றறிந் தும்மிவை யுரைத்ததென் னறிவால்.

13

      (இ-ள்) மார்க்கத்தினது தப்பிதத்தை யுடைய அந்த முகம்மதென்பவனை யாங்கள் கூப்பிட்டு ஓரிமை நொடிக்கும் நேரமேனும் அவனைச் சமீபித் துட்கார்ந் தறியோம். உங்ளை மறுதலித்தவர்களுக்குச் சத்தியங்களைக் கூறுவ தெம்மார்க்கம்? நீங்கள் எங்களது உண்மையைச் சேர்ந்துணர்ந்தும் இச் சமாச்சாரங்ளைக் கூறியது எப் புத்தியினால்?

 

2479. இந்நி லத்தவர் மதீனமன் னவரொடு மிணங்கி

     நன்னி லைப்பட விருப்பது பிரிப்புற நலியா

     மன்னும் வஞ்சக முகம்மது மாயவிச் சையினா    

     லுன்னி வந்ததக் கூக்குர லுரைத்திடு முரையே.

14