பக்கம் எண் :

சீறாப்புராணம்

916


New Page 1

இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அந்தக் கூக்குரலுடன் கூறும் வார்த்தை யானது இந்தத் திரு மக்கமா கரத்தை யுடையோர்கள் திரு மதீனமா நகரத் தரசர்களுடன் நேசித்து நன்னிலைமைப் படும் வண்ண மிருப்பதைப் பிரிக்கும்படி மெலியாது சேரா நிற்கும் கபடத்தையுடைய அம் முகம்ம தென்பவனின் மாய வித்தையினா லோங்கி வந்தது.

 

2480. அலது வேறிலை யெனச்செழு மதீனமன் னவர்கள்

     பலருங் கூறின ரியாவருங் கேட்டிவை படிறொன்

     றிலை யெனச்சிர மசைத்தவர்க் கினியன புகன்று

     தலைவ மாரொடு மவரவர் சார்பினிற் சார்ந்தார்.

15

      (இ-ள்) அல்லாமல் பிறிதில்லை யென்று செழிய அந்தத் திரு மதீனமா நகரத்தினது அரசர்களாகிய பலருஞ் சொன்னார்கள். அதைத் திரு மக்கமா நகரத்தினர்க ளியாவரும் தங்களின் காதுகளினாற் கேள்வி யுற்று இவற்றில் ஓ ரசத்தியமு மில்லை யென்று தங்களின் தலைகளை யாட்டி அம் மதீனத்தார்களுக்கு இனிமையான வார்த்தைகளைச் சொல்லித் தலைமைத் தனத்தை யுடையவர்ளோடும் அவரவர்களின் இடங்களிற் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2481. குறைசி கட்கெதிர் மொழிந்திடுங் காபிர்கள் குலமு

     மறைப டத்தனி யிருந்தமெய்த் தீனின்மன் னவரு

     முறைமை யாகிய கச்சினைக் குறைவற முடித்துப்

     புறநி லத்தரு மவரவர் பதியினிற் போனார்.

16

     (இ-ள்) திரு மக்கமா நகரத்தின் கண்ணுள்ள குறைஷிகளுக்கு அவ்வாறு எதிர் கூறிய  அந்தத் திரு மதீமனா நகரத்தினது காபிர்களின் கூட்டமும் இரகசியமாய் ஒப்பற்றத் தங்கிய சத்தியத்தையுடைய தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தினது அரசர்களும் இதர தேயத்தார்களும் ஒழுங்கை உண்டாக்கிய ஹஜ் ஜென்னுந் தொழுகை முதலியவற்றைக் குறைவில்லாது நிறைவேற்றி அவரவர்களின் ஊர்களிற் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2482. பரத்த லத்தவர் போயபி னறமெனும் பழைய

     புரத்தி னுற்றவன் காபிர்கள் மதீனமா புரத்தோர்

     திருத்துந் தீனிலை முகம்மதி னொடுந்திட வசன

     முரைத்துப் போயவை யுற்றறிந் தொருங்கினிற் றிரண்டார்.

17

      (இ-ள்) இதர தேயங்களை யுடையவர்கள் அவ்வாறு போன பிற்பாடு ஹற மென்று கூறா நிற்கும் பழமையினது நகர மாகிய திரு மக்காவின் கண் தங்கிய கொடிய காபிர்கள் திரு மதீனமா நகரத்தார்கள் நல் வழியில் திருத்தா நிற்குந் தீனுல் இஸ்லா