இரண்டாம் பாகம்
மென்னும் மெய்ம்
மார்க்கத்தினது நிலைமையை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களோடு உறுதி வார்த்தைகள் கூறிச் சென்றவற்றை ஆராய்ந் தறிந்து ஒன்றாகக்
கூடினார்கள்.
2483.
இடுசு தைக்கதிர் மறுகினு மாவணத் திடத்துங்
கொடுமு டிப்பெருங் கோயில்க ளிடத்தினுங்
குறுகா
ருடனு றைந்திடு மனையினு மதீனத்து ளோரைக்
கடிதிற் றேடினர் திரிந்தனர் சினத்தொடுங்
கறுத்தே.
18
(இ-ள்) அவ்வாறு
கூடி மனக் குறைப்பட்டுக் கோபத்தோடும் பூசிய வெண்சுண்ணச் சாந்தினது பிரகாசத்தை யுடைய
தெருக்களினிடத்தும், கடை வீதிகளினிடத்தும் சிகரங்களை யுடைய பெரிய ஆலயங்களினிடத்தும், தஞ்
சத்துராதிக ளோடு தங்கும் வீடுகளினிடத்து விரைவில் திரு மதீனமா நகரத்தார்களைத் தேடித் திரிந்தார்கள்.
2484.
தேடி யெத்திசை தொறுந்திரிந் தலுத்தொரு
தெருவிற்
கூடி முந்திறென் பவரையுஞ் சகுதையுங் குறுகி
யாடை முந்திதொட் டீழ்த்துறுக் கொடுமலக்
கழித்து
வீடு றைந்தொளித் தவரிவ ரெனக்கொடு
விடுத்தார்.
19
(இ-ள்) எத்
திக்குகளிலும் அவ்வாறு தேடித் திரிந்து சலித்து ஓர் வீதியில் சேர்ந்து முந்தி றென்னும் அபிதானத்தை
யுடையவரையும் சகுதென்பவரையும் கிட்டி அவர்களினது வஸ்திரத்தின் முன்றானையைக் கைகளாற் பற்றி
இழுத்துக் கோபத்துடன் துன்பப் படுத்தி இவர்கள் வீட்டின் கண் சென்று ஒளித்தவர்க ளென்று
சொல்லிக் கொண்டு வந்து விட்டார்கள்.
2485.
விரைந்து காபிர்கண் முன்கொடு
விடுக்குமந் நேரங்
கரந்து முந்திறென் பவரொரு திசைநெறி
கடந்தார்
பரந்து தேடின ரோடினர் காண்கிலர்
பதைத்து
வருந்திச் சஃதொருத் தரையுமே
நெருக்கிட வளைந்தார்.
20
(இ-ள்) அவ்வாறு
விரைவாகக் காபிர்களின் முன்னர் கொண்டு வந்து விட்ட அந்தச் சமயத்தில் முந்தி றென்னும் அபிதானத்தை
யுடையவ ரொளித்து ஓர் திக்கின் மார்க்க மாக அவ்விடத்தை விட்டுங் கடந்து சென்றார்.
காபிர்கள் அவரை எவ்விடத்தும் பரவி விசாரித்துக் காணாதவர்களாகித் துடித்துத் துக்கித்துச்
சஃதென்னு மொருவரை மாத்திரம் கொடுமை செய்யச் சூழ்ந்தார்கள்.
2486.
பற்று வார்சில ரடருவர் சிலர்கரம்
பதிய
வெற்று வார்சில ரிணைவரன் மடக்கிமெய்
சேப்பக்
குற்று வார்சில ரடிக்கடி கொதித்தவ
ரலது
சற்று மாறின ரலர்கொடுங் காபிர்க டாமே.
21
|