இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ் வண்ணஞ் சூழ்ந்து
சில காபிர்கள் அவரைக் கைகளினாற் பிடிப்பார்கள். சில காபிர்கள் கிட்ட நெருங்குவார்கள்.
சில காபிர்கள் தங்களின் கைகள் பதியும்படி அடிப்பார்கள். சில காபிர்கள் சேர்ந்த விரல்களை
மடித்து அவரின் சரீரமானது செந்நிறத்தை யடையும் வண்ணம் குத்துவார்கள். இந்த விதமாகக் கொடுமையை
யுடைய அந்தக் காபிர்கள் அடிக்கடி கோபித்தார்களே யல்லாமல் கொஞ்ச மேனும் அவரை விட்டும்
நீங்கினவர்க ளல்லர்.
2487.
அடிமி னென்பவர் சிலர்சில
ராதகா திவரை
விடுமி னென்பவர் சிலர்சில
ரவர்களை வெகுண்டு
பிடிமி னென்பவர் சிலர்சில
ரிவனுயிர் பிசைந்து
குடிமி னென்பவர் சிலர்சிலர்
காபிர்கள் குழுமி.
22
(இ-ள்) அன்றியும், அந்தக்
காபிர்கள் கூடி அடியுங்க ளென்று சொல்லப்பட்டவர்கள் சிற் சில பேர்கள். ஆ! அப்படி அடிப்பது
தகாது, இவரை விட்டு விடுங்களென்று சொல்லப் பட்டவர்கள் சிற் சில பேர்கள். அவ்வாறு சொன்னவர்களைக்
கோபித்துப் பிடியுங்க ளென்று சொல்லப் பட்டவர்கள் சிற் சில பேர்கள். இவனது பிராணனைச் சேர்ந்துக்
கலந்து குடியுங்க ளென்று சொல்லப் பட்டவர்கள் சிற் சில பேர்கள்.
2488.
ஒலித பூசகு லுத்துபா வுடனுமை
யாவு
மலித ருங்குறை சிகளொடு மிவர்மன
மறுக
வலைவு செய்திடும் வேளையில்
சுபைறுமா ரிதுவுங்
கலியி தென்கொனீர் செய்தவை
யெனக்கழ றுவரால்.
23
(இ-ள்) ஒலீது, அபூஜகில்,
உத்துபா வாகிய இவர்களோடும் உமையா வென்பவனும் மிகுந்த குறைஷிக் காபிர்களுடன் இந்தச் சஃதென்பவரை
அவரின் இதய மானது சுழலும் வண்ணம் அவ்வாறு வேதனை செய்திடுஞ் சமயத்தில் சுபை றென்பவரும் ஆரிதும்
நீங்கள் செய்தவைகளாகிய கேடு, இஃதென்ன? வென்று சொல்லிச் சொல்லுவார்கள்.
2489.
குற்ற மின்றிய ஒளசுடன்
கசுறசுக் குலத்தோர்க்
குற்றி டும்பெருந் தலைமையிற்
பெயிரினி லுயர்ந்தோன்
பற்ற லர்க்கரி யேறிவ
னொடும்பகை விளைப்ப
முற்று மோநமர் குலந்திர ளினுமுடி
யாதே.
24
(இ-ள்) களங்க மில்லாத
அவுசுக் கிளையார்களோடு கசுறஜீக் குலத்தார்களுக்குப் பொருந்திய பெரிய தலைமைத் தனத்திலும்
கீர்த்தியிலும் மேன்மைப் பட்டவனும் சத்துராதிகளாகிய யானைகளுக்கு ஆண் சிங்கத்தைப் போன்றவனுமான
இந்தச்
|