இரண்டாம் பாகம்
சஃதென்பவ னுடன் போர்ச் செய்ய
நம்மவர்களின் கூட்டங்கள் ஒன்று கூடினாலும் முடியுமா? முடியாது.
2490.
மதின மானக ரவர்க்குமிப்
பதியின்மன் னவர்க்கு
மிதம தன்றியே யிகலிலை
யின்றிவன் பொருட்டாற்
புதிய வெம்பகை விளைந்தது
போக்கவு மரிதிச்
சதிவி ளைத்தது தகுவதன்
றெனவுரைத் தனரால்.
25
(இ-ள்) திரு மதீனமா
நகரத்தார்களுக்கும் இந்தத் திரு மக்கமா நகரத் தரசர்களுக்கும் சினேகமே யல்லாமல் விரோத
மில்லை. இன்றையத் தினம் இந்தச் சஃதென்பவனின் காரணத்தினால் நூதனமாகிய கொடிய விரோத முண்டாயிற்று.
இதை யகற்றவுங் கூடாது. இவ் வழிவை யுண்டாக்கியது தகுதியாவ தெக்காலம்? என்று சொன்னார்கள்.
2491.
குவித ருங்குலத் தவர்சினங்
கெடமதிக் குறிப்பாய்ச்
சுபைறு மாரிது முரைத்தலு மிதயங்க
டுணுக்குற்
றவம றிந்தில மெனவிடுத்
தகன்றனர் மறைநேர்
தவமு யன்றிடு சகுதுவுஞ்
சார்பினிற் சார்ந்தார்.
26
(இ-ள்) சுபை றென்பவரும்
ஆரிதும் திரண்ட காபிர்களாகிய அக்கூட்டத்தார்களின் கோபமான தழியும் வண்ணம் புத்தியினது
கருத்தாக அவ்வாறு கூறிய மாத்திரத்தில் அவர்கள் தங்களின் மனமான தச்சமடையப் பெற்று
யாங்கள் இவ்வித வீணை யுணர்ந்திலோ மென்று அந்தச் சஃதென்பவரை விட்டும் நீங்கிச் சென்றார்கள்.
புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது சத்திய தவத்தில் முயற்சி செய்யா நிற்கும் அந்தச்
சஃதென்பவரும் தாம் தங்குமிடத்திற் போய்ச் சேர்ந்தார்.
2492.
குறைசிக் காபிர்கள் விளைத்திடுங்
கொடியவல் வினையை
மறைத ரித்தநன் முகம்மதி
னுடன்வகுத் துரைத்து
நிறைம னத்தொடும் பணிந்தெழுந்
தவரிட நீங்கி
யுறையுந் தந்நகர் புகுந்தனர்
சகுதெனு முரவோர்.
27
(இ-ள்) அவ்விதஞ் சேர்ந்த
சஃதென்று கூறும் அபிதானத்தையுடைய அவ் வறிஞர் குறைஷிக் காபிர்கள் தம்மைச் செய்த கொடிதான
வலிய செய்கையைப் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தைப் பூண்டு நன்மை பொருந்திய நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களோடு பிரித்துச்
சொல்லி உறுதிப் பாட்டையுடைய சிந்தையுடன் அந் நபிகட் பெருமானவர்களை வணங்கி எழும்பி அவர்களினிடத்தை
விட்டு மகன்று தாம் தங்கா நிற்குந் திரு மதீனமா நகரத்தின் கண் போய்ச் சேர்ந்தார்.
|