பக்கம் எண் :

சீறாப்புராணம்

92


முதற்பாகம்
 

199. தெரியுந் திங்களைந் தினிலிசு மாயில்செப் பினரா

    லுரிய மென்மயி லேநின துதரத்தி லுறைந்தோர்

    தரிய லர்க்கிடி யாயடுத் தவர்க்கொரு தருவாய்

    வரிசை யுற்றவர் பெயர்முகம் மதுவென வகுத்தே.

34

     (இ-ள்) கருப்பமாகிய ஐந்தாம் மாதத்திலே நபிப்பட்டம் பெற்ற இஸ்மாயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் ஆமினா அவர்களின் சொப்பனத்தில் வந்து மெல்லிய திருமேனியை யுடைய மயிலாகிய ஆமினாவே! தகுதியான உனது வயிற்றின்கண் தரிக்கப்பட்ட பிள்ளையானவர் பகைவர்கட்கு வானேறாகியும், சார்ந்தோர்கட்கு ஒப்பற்ற கற்பகத்தருவாயுந் தோற்றாநிற்கும் வரிசையினைப் பொருந்தியவர், அவர் பெயராகிறது முஹம்மதாயிருக்குமென்று வகைபடுத்திச் சொன்னார்கள்.

 

200. ஆறு திங்களில் வந்துமூ சாநபி யழகாக்

    கூறு மென்கரும் பேநின்றன் வயிற்றுறு குழந்தை

    வீறு பெற்றிடுந் தலைமையும் பெரும்பத வியையு

    மாறி லாதவர் பெயரிடு முகம்மதென் றுரைத்தார்.

35

     (இ-ள்) கருப்பமாகிய ஆறாமாதத்திலேயே நபிப்பட்டம் பெற்ற மூசா அலைகிஸ்ஸலாமவர்கள் அழகாக ஆமினா அவர்களின் சொப்பனத்தில் வந்து வியந்தோதா நிற்கும் மெல்லிய கரும்பாகிய ஆமினாவே! உனது வயிற்றின்கண் பொருந்திய பிள்ளையானவர் பெருமை பெற்ற நாயகத்தனத்திலும் பெரிய பதவியிலும் மாறுதலில்லாதவர், அவர் பெயர் முஹம்மதாயிருக்கும். அப்பெயரையே நீயுமிடுவாயாக என்று சொன்னார்கள்.

 

201. சினவு வேற்கரத் தப்துல்லா வெனுமொரு சிங்க

    மனைவி யாகிய ஆமினா வெனுங்குல மடமா

    னினமு மாயமும் வாழ்த்திடக் கருப்பமு மிலங்கக்

    கனவு கண்டக மகிழ்ந்தினி திருக்குமக் காலம்.

36

     (இ-ள்) பகைவற்மேற் கோபிக்கின்ற வேற்படையானது தங்கிய கையினையுடைய அப்துல்லாவென்று சொல்லும் ஒப்பற்ற சிங்கத்தினது மனைக்குரியரான ஆமினாவென்று சொல்லுங் குலத்திற் சிறந்த இளமானானவர் தமது பந்துக்களும் பாங்கிகளும் வாழ்த்தும்படிக்கும் சூல் விளங்கும்படிக்கும் மேற்கூறியபடிச் சொப்பனங்களைக் கண்டு மனமகிழ்ச்சி கொண்டு இனிமைபொருந்த விருக்குமந்தக் காலத்தில்.