பக்கம் எண் :

சீறாப்புராணம்

921


இரண்டாம் பாகம்
 

2496. ஆதி நாயக னுரையவண் புகவரு மளவு

     மேத மின்றியிங் கிருந்துபின் வருகுவ னியான்முன்

     போதல் வேண்டுநம் மினத்தவ ரெனப்புகழ்ந் துரைத்தா

     ரீது முத்திரைப் பொருளென யாவரு மியைந்தார்.

31

      (இ-ள்) யான் அந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் போகும்படி யாவற்றிற்கும் முதன்மைய னான நாயகனாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் வசன மென்னும் வஹி யானது வரும் வரையும் குற்றமின்றி இந்தத் திரு மக்கமா நகரத்தின் கண்ணிருந்து பின்னர் வருகின்றேன். முதலில் நமது கூட்டத்தார்கள் அவ்விடஞ் செல்லுதல் வேண்டுமென்று துதித்துக் கூறினார்கள். யாவர்களும் அவ்வார்த்தைகளைக் காதுகளினாற் கேள்வி யுற்று இஃது முத்திரைப் பொரு ளென்று சொல்லி அதற் குடன்பட்டார்கள்.

 

2497. சோதி நாயகன் றிருமறைத் தூதுவ ரிறசூ

     லோதும் வாய்மையு மறைப்பொரு ளெனவுளத் திருத்திச்

     சாதி மன்னவர் மூவரு மிருவருந் தனித்தும்

     போதும் வல்லிருட் பொழுதினும் பகலினும் போனார்.

32

      (இ-ள்) பிரகாசத்தையுடைய எப் பொருட்கு மிறைவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது றசூ லாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு கூறிய வார்த்தைகளையும் வேதார்த்த மென்று மேன்மையான அம் மக்கமா நகரத்தின் கண்ணுள் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தையுடைய அரசர்கள் இதயத்தி னிடத்தி லிருக்கும்படி செய்து மூன்று பேராகவும் இரண்டு பேராகவும் ஏகமாகவும் அகலா நிற்கும் கொடிய அந்தகாரத்தை யுடைய இராக் காலத்திலும் பகற் காலத்திலும் அம் மதீனமா நகரத்தை நோக்கிச் சென்றார்கள்.

 

2498. உரத்தின் மிக்கபூ பக்கரு முமறுது மானும்

     வரைத்த டப்புய வலியலிப் புலியும்வன் காபிர்

     கரத்த கப்படும் பெயருமல் லதுசெழுங் கலிமாத்

     திருத்துந் தீனவ ரியாவரும் மதீனத்திற் சேர்ந்தார்.

33

      (இ-ள்) வல்லமையினால் மிகுத்த அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு அவர்களும் உதுமா னிபுனு அப்பான்றலியல்லாகு அன்கு அவர்களும் மலையைப் போன்ற பெரிய தோள்களினது வல்லமையையுடைய புலியாகிய அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு அவர்களும் கொடிய காபிர்களின் கைகளில் சிக்கிய பேர்களுமே யல்லாது செழிய ழுலாயிலாஹ இல்லல்லாகு