பக்கம் எண் :

சீறாப்புராணம்

923


இரண்டாம் பாகம்
 

2502. பொறுமை யுள்ளவன் போலவும் வணக்கத்திற் புகழி

     னறிவின் மிக்கவன் போலவு மறபிவங் கிடத்தின்

     பிறவி போலவு முதிர்ந்தவன் போலவும் பிரியா

     துறவி னுற்றவன் போலவு மவையினுற் றனனால்.

37

      (இ-ள்) பொறுதி யுள்ளவனைப் போலவும், தொழுகையிலும் கீர்த்தியிலும் புத்தியிலும் மேன்மைப் பட்டவனைப் போலவும், அறபிக் கிளையினது பிறப்பை யுடையவனைப் போலவும், விருத்தாப்பியனைப் போலவும், நீங்காத பந்துக்களிற் பொருந்தினவனைப் போலவும், அந்தச் சபையின் கண் வந்து சேர்ந்தான்.

 

2503. சாரு மெய்நரை பிறங்கிய முதியவன் றனைக்கண்

     டாரு மிங்கிவர் பெரியரா மெனவகத் திருத்தி

     வாரு மிங்கிரு மெனவுரைத் தனர்மன மகிழ்வுற்

     றீர முற்றிடு மறிவர்க ளிடத்தினி லிருந்தான்.

38

      (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த சரீரத்தின் நரையானது பிரகாசிக்கப் பெற்ற விருத்தாப்பியனான அவ் விபுலீசு லகுனத் துல்லாவை யாவர்களுங் கண்களினாற் பார்த்து இந்த விருத்தாப்பியர் பெரியவரென்று தங்களி னிதயத்தின் கண்ணிருக்கும்படி செய்து வாரும், இவ் விடத்தி லுட்காரு மென்று சொன்னார்கள். அதைக் கேள்வியுற்ற அவன் மனஞ் சந்தோஷமடைந்து கிருபையைப் பொருந்திய அவ்வறிவாளர்களிடத்துட்கார்ந்தான்.

 

2504. மருளி லாதுநன் மறைகளை மறுவறத் தேர்ந்து

     தெருளு மேலவர் சிறியவ ரியாவர்க்குந் தெரியப்

     பொருளுஞ் சொல்லுமொத் திருந்தன மொழிகளாற் பொருந்த

     விருளும் புன்மனக் கொடியவ னபூசகு லிசைப்பான்.

39

      (இ-ள்) அவ்வித மிருக்க இருளா நிற்கும் கீழ்மை யான மனத்தையுடைய பாதகனாகிய அபூஜகி லென்பவன் மயக்க மின்றி நன்மை பொருந்திய முன்னுள்ள வேதங்களைக் களங்க மறத்தெளிந்து தேர்ந்த பெரியவர் சிறியவ ராகிய எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் சொல்லி னருத்தமும் சொல்லும் ஒன்றுபட்டிருப்பதைப் போன்ற வார்த்தைகளாற் பொருந்தும்படி கூறுவான்.

 

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

2505. மறுவெனப் பிறந்திவ் வூரிடை வளர்ந்த

          முகம்மது மாயவித் தையினா

     லறிவுறா வினைமேற் போட்டுநம் மினத்தா

          ரவர்சிலர் தமையகப் படுத்தி