இரண்டாம் பாகம்
யுறையுமந் திரத்தி னுருமுடித்
திவையே
புதுமையென் றுலகெலாஞ்
செலுத்தி
நிறைபெறத் தனது பெயரையு நிறுத்தித்
தீனையு நிலைநிறுத் தினனால்.
40
(இ-ள்) இந்தத்
திரு மக்கமா நகரத்தின் கண் மறுவைப் போலும் தோற்றமாகி வளர்ந்த முகம்ம தென்பவன் தனது வஞ்சக
விஞ்சையினால் அறிவைப் பொருந்தாத செயல்களை மேற்போட்டு நமது கூட்டத் தார்களாகிய அவர்களில்
சில பேர்களை அவற்றிலுட் படுத்தித் தன்னிடத்திற் றங்கிய மந்திரத்தால் ஜெப முடித்து இவைகள்தா
மற்புதமென்று பூலோக முழுவதுஞ் செலுத்திப் பூரண மாகத் தனது கீர்த்தியையும் நிலை நிற்கச் செய்து
தீனுல் இஸ்லா மென்னும் அவனது மார்க்கத்தையும் நிலையாக நாட்டினான்.
2506.
இனம்பெருத் திருந்து மிவைபரி
கரித்தோ
மிலையெனு மவமொ ழியுலகந்
தனினிலை நிறுத்தி விட்டன
மறிவுந்
தரணியிற் பெருமையு மிழந்தே
மனமுழற் றுவதென் னினியவ
ரவர்க்கு
வந்ததா நினைத்திடின்
விளைந்த
வினைகளுஞ் சிதறி நமரவ ரெவர்க்கு
மேன்மையும் வீடுமுண் டாமால்.
41
(இ-ள்) நமது கூட்ட மதிகரித்
திருந்தும் இவ்விதச் செய்கைகளை நீக்கினோ மில்லையென்று கூறும் இழிவான வார்த்தைகளை இந்தப்
பூமியினிடத்து நிலையாக நிற்கச் செய்து விட்டோம். நாம் இவ்வுலகத்தின் கண் புத்தியையும்
பெருமையையு மிழந்தோம். மனமானது வருந்துத லுற்றுப் புரளுவதினால் என்ன பிரயோசனம்? ஒன்றுமில்லை.
இனி இச் செய்கையை நாமெல்லாம் அவ ரவர்களுக்கு வந்து சேர்ந்ததாகக் கருதினால் உண்டாகிய இத்
தீத் தொழில்களும் சிதறுத லுற்று நம்மவர்களி யாவருக்கும் மகத்துவமும் மோட்சமு முண்டாகும்.
2507.
வருந்தகை யிஃதென் றகுமதின்
வலியை
மாய்த்திட லரிதென
மனைக்க
ணிருந்துபே தையர்போ லெண்ணின்
மெனினம்
மிரும்புய வீரமும்
பணையுந்
திருந்திடா தினந்தேய்ந் திகலவ
ரெவருஞ்
சிரித்திட வுலகமு
நகைக்கு
மருந்தவத் துடையீ ரீதலாற்
பிழைவந்
தடருவ தலதொழி யாதே.
42
|