இரண்டாம் பாகம்
(இ-ள்) அருமை யான தவத்தை
யுடைவர்களே! இஃது வரா நிற்குந் தன்மைய தென்று சொல்லி அந்த அஹ்ம தென்னும் அபிதானத்தை யுடைய
முகம்ம தென்பவனின் வல்லமையை மாய்ப்பது அருமையான விடய மென்று வீட்டி னகத் திருந்து அறிவில்லாத
பெண்களைப் போலும் எண்ணினோமே யானால் நமது பெருமை தங்கிய தோட்களினது வலிமையும் திரட்சியுஞ்
செவ்வைப் படாது. நமது குடும்பமும் குறைத லுற்றுச் சத்துராதிகளாகிய யாவரும் நகைக்கும் வண்ணம் இப்பூலோகமும்
நகையா நிற்கும். இஃதல்லாது குற்றமானது வந்து நெருங்குமே யல்லாமற் றொலையாது.
2508.
இகத்தினி லெவர்க்கு முடித்திட
வரிதென்
றிருக்குமோர் வல்வினை
யெனினு
மகத்தினி லொருமித் தெடுத்தொரு
துணிவா
யடுப்பதோர் முயற்சியுண்
டாயின்
செகத்தினில் விளக்கும்
புகழொடு முடியுஞ்
சிறியனென்
வாக்கிற்செப் புவதென்
பகுத்தறி வுடையீ ருங்கடம்
மனத்திற்
படுமொழி யலதுவே றலவே.
43
(இ-ள்) ஒவ்வொன்றையும்
பிரித் தறியா நிற்கும் அறிவையுடையவர்களே! இந்தப் பூமியின் கண் யாவர்களுக்கும் முற்றுவித்தல்
அருமையான விடய மென் றிருக்கும் வலிய ஒரு செய்கையே யென்றாலும் மனதின் கண் ஒன்று பட்டு ஒப்பற்ற
துணிகரமா யெடுத்து நெருங்குகின்ற ஓர் முயற்சி யுண்டுமேயானால் அது இவ்வுலகத்தின் கண் விளக்கிக்
காட்டா நிற்கும் கீர்த்தியுடன் நிறைவேறும். சிறியே னாகிய யான் எனது வாக்கினாற் கூறுவதென்னை,
ஒன்றுமில்லை. இஃது உங்களினிதயத்தி லுண்டாகிய வார்த்தையே யல்லாமற் பிறி தில்லை.
2509.
முன்னைநா ளபித்தா
லிபுவயின் பலகான்
மொழிந்துவற் புறுத்திய
தனைத்து
முன்னியுட் கணித்தா னிலன்கொடும்
புலிவா
லுருவிய தகைமையொத் திருந்தா
னின்னைநாட் டொடுத்தும்
விடுதவதன் றெளிதின்
விட்டன மெனிலிரும்
பதியி
லன்னவன் முரணி லெவ்வள வெனினு
மமைத்திட நமர்க்கரி
தாமால்.
44
(இ-ள்) நாம் சென்ற
நாட்களில் அபீத்தாலி பென்பவரிடத்தில் பல தடவை கூறி யுறுதிப் படுத்திய தெல்லாவற்றையும் அந்த
முகம்ம தென்பவன் மனதின் கண் சிந்தித்து மதித்தா னில்லன்.
|