இரண்டாம் பாகம்
கொடிய புலியினது வாலைக் கைகளா
லுருவிய தன்மையை நிகர்த்து அகங்காரத்துடனிருந்தான். இந்த நாளில் அவன் இவ்விதத்துர்க்
கிருத்தியங்களை நடத்த ஆரம்பித்தும் இலகுவில் விடக் கூடாது. அப்படி விட்டோமே யானால் பெரிய
இந்த மக்கமா நகரத்தின் கண் அவனது மாறுபாட்டில் எவ்வளவையும் அமையப் பண்ணுதல் நம் மவர்களுக்கு
அருமையான காரியமாகும்.
2510.
எள்ளுதற் கரிதாய் மிகுவலி
படைத்திங்
கிருந்தன னிதற்குமுன்
னொருநா
ணள்ளிடை யிரவிற் றேவதன்
மையினா
னான்மறு கிட்டதினுஞ்
சிறப்ப
விள்ளுதற் கரிதா
யொருதொனி யெவர்க்கும்
விளங்கிற்று விடிந்தபின்
றொடுத்துத்
தெள்ளுநன் மொழியா லெவரையும்
வினவும்
பொழிதினி லவைதெரிந்
திலவே.
45
(இ-ள்) அந்த முகம்ம
தென்பவன் தள்ளுதற் கருமையான மிகுத்த வலிமையைச் சம்பாதித்து இந்தத் திரு மக்கமா நகரத்தின்
கண்ணிருந்தான். இதற்கு முன்னர் ஓர் தினத்து அர்த்த ராத்திரி வேளையில் தெருக்களின் நான்கு
பக்கங்களிலும் தெய்வத்தன்மையினால் சிறக்கும் வண்ணம் ஓரோசை யானது கூறுதற் கரியதாக விளக்கமாய்
யாவரின் காதுகளுக்குங் கேள்வியுற்றது. சூரிய னுதயமான பின்னர் ஓசையோடு தெளிதலுற்ற நன்மை
பொருந்தி அந்த வார்த்தையினால் திரு மதீனமா நகரத்தார்களியாவரையுங் கேட்குங் காலத்தில்
அந்தச் சமாச்சாரங்க ளொன்றும் தெரிந்திலது.
2511.
புரத்தினி லிரவிற் பிறந்தசொன்
னென்னற்
பொழுதினிற் றெரிந்ததே
தென்னில்
வரத்தினி லுயர்ந்த மதீனமா
நகரார்
முகம்மதின் மார்க்கமன்
னெறியைக்
கருத்தினிற் பொருத்தி யுண்மைகொண்
டவ்வூர்
காக்குதற் கிவரையு
மரசா
யிருத்துதற் கரிய வலக்கரங்
கொடுத்தங்
கெழுந்தன ரியாவரு மியைந்தே.
46
(இ-ள்) இந்தத் திரு மக்கமா
நகரத்தின்கண் நடு ராத்திரியின் அவ்வாறு தோற்ற மாகிய வார்த்தையானது நேற்றையப் போதில்
விளங்கிற்று. அஃதியாதெனில் வரத்தினால் மேன்மைப்பட்ட திரு மதீனமா நகரத்தார்கள் அந்த முகம்ம
தென்பவனின் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற் சேர்ந்த ஒழுங்குகளை மனதினிடத்துப் பொருந்தச்
செய்து அவைகளை விசுவாசித்து அத் திரு மதீனமா
|