பக்கம் எண் :

சீறாப்புராணம்

927


இரண்டாம் பாகம்
 

நகரத்தைப் புரப்பதற்கு இந்த முகம்ம தென்பவரையும் அரசாக இருக்கச் செய்வதற்கு அருமையான வலக்கை யீந்து சம்மதித்து அவ் வூருக்கு எழுந்து சென்றார்கள்.

 

2512. அந்நெறி முறையே முகம்மதுக் கீமான்

          கொண்டவ ரனைவரு மதீனாப்

     பொன்னகர் புகுந்தா ரவர்களு மிவர்க்குப்

          பொருவிலா வரிசைக ளளிப்ப

     மன்னியங் கிருந்து நாட்குநாள் தீனை

          மறைபடா தோங்கிட வளர்த்தா

     ரிந்நிலத் திவனு மப்பெரும் பதியிற்

          போவதற் கிசைந்திருந் தனனால்.

47

     (இ-ள்) அவ் வொழுங்கின் பிரகாரம் அந்த முகம்மதென்பவனுக்கு ஈமான் கொண்ட ஜனங்க ளியாவரும் திரு மதீன மென்னும் அழகிய ஊரின் கண் போய்ச் சேர்ந்தார்கள். அவ் வூரிலுள்ளவர்களும் இவர்களுக்கு ஒப்பற்ற வரிசைகள் கொடுக்க அவ்விடத்திற் பொருத்த முற்றுறைந்து தினந் தினம் தீனுல் இஸ்லாமென்னும் தமது மார்க்கத்தை ஒளியா தோங்கச் செய்தார்கள். இந்தத் திரு மக்கமா நகரத்தையுடைய இந்த முகம்ம தென்பவனும் அந்தப் பெரிய ஊரின் கண் போய்ச் சேருவதற்குப் பொருந்தியிருக்கின்றான்.

 

2513. புதுமறை வளர்க்கு முகம்மது மதீனாப்

          பதியினிற் புகுவனேற் றொலையாச்

     சதிவிளைந் திடுவ தறுதிதன் வலியாற்

          றணிப்பவ ரிவணிலை யெவரும்

     பதியைவிட் டருங்கான் புகுந்தின மெனும்பேர்ப்

          பற்றறத் திரிவது மல்லாற்

     கதிபெறு தேவா லயங்களு நமர்தஞ்

          சமயமுங் காண்பதற் கரிதே.

48

      (இ-ள்) நூதன மாகிய புறுக்கானுல் அலீ மென்னும் வேதத்தை யோங்கச் செய்யும் முகம்ம தென்பவனும் திரு மதீனமா நகரத்தின் கண் அவ்வாறு போய்ச் சேருவானே யானால் நம் மவர்களுக்கு ஒழியாத அழிவுண்டாவது முடிவான காரியம். இந்தத் திரு மக்கமா நகரத்தின் கண் தனது வல்லமையினால் அவர்களைக் குறைப்பாரொருவரு மில்லர். அதனால் நாம் யாவரும் நமது நகரத்தை விடுத்து அரிய காட்டி னிடத்துப் போய்ச் சேர்ந்து பந்துத்துவ மென்னும் பெய ரானது முற்று மற்றுப் போகும் வண்ணஞ் சஞ்சரிப்பது மல்லாமல் மோட்சத்தைப் பெறா நிற்குங் கோவில்களும் நம்மவர்களுடைய மார்க்கமும் காணுவதற் கருமையாகும்.