இரண்டாம் பாகம்
2514.
இந்தவல் வினைகண் முடியுமுன்
றமர்க
ளெவர்களு மறையினாற்
றெளித்து
புந்தியிற் றெரிந்து செய்வது
தவிர்வ
தெனும்வினை பிறந்திடப்
பொருத்தி
மந்திரப் பொருளாய்க் குலநலந்
தழைக்க
மாற்றமொன் றுரைமின்க
ளென்ன
நிந்தையும் படிறுங்
கொலையுமுள் ளமைத்த
நெஞ்சின னபூசகு லுரைத்தான்.
49
(இ-ள்) இந்தக் கொடிய
செய்கைக ளானவை நிறைவேறுதற்கு முன்னர் நமது பந்துக்க ளாகிய நீங்க ளியாவர்களும் நமது வேதத்தினால்
மனதின் கண் தேறி யுணர்ந்து இஃது செய்யத்தகுவது, இஃது நீக்கத் தகுவ தென்னுந் தொழி லானவை தோற்றமாகும்
வண்ணம் பொருந்தச் செய்து மந்தி ரார்த்தமாய் நமது கிளையின் நன்மையான ததிகரிக்கும்படி ஒரு
வார்த்தை சொல்லுங்க ளென்று இழிவையும் பொய்ம்மையையும் கொலைத் தொழிலையும் உள்ளே அமையச்
செய்த மனத்தை யுடையவனான அவ் வபூஜகி லென்பவன் கூறினான்.
2515.
தலைவரிற் றலைவ னபூசகு லெடுத்துச்
சாற்றிய மாற்றம
தனைத்து
முலைவுறக் கேட்டுப் பெரிதழிந்
தொக்கு
மொக்குமென்
றொருவருக் கொருவர்
நிலைபெறத் தேறி யிருக்குமவ்
வவையி
னெஞ்சழன்
றொருகொடுங் காபிர்
தலைவலான் சகுதைச் சிறைப்படா
விடுத்தல்
கருமமன் றெனக்கழ றினனால்.
50
(இ-ள்) தலைமைத் தனத்தை
யுடைவர்கட் கெல்லா மதியனான அவ் வபூஜகி லென்பவன் அவ்வாறு எடுத்துச் சொல்லிய செய்திக
ளியாவையும் அந்தக் காபிர்க ளியாவரும் நடுக்க முறக் காதுகளினாற் கேள்வியுற்று மிகவும் கெடுத
லடைந்து ஒருவர்க்கொருவர் இஃது பொருந்தும் பொருந்து மென்று சொல்லி நிலைமை பெறும்படி தெளிந்
துறைந்த அந்தச் சபையி னிடத்து ஒரு கொடிய காபி ரானவன் தனது மனமானது புழுக்கமுறப் பெற்று சாத்திரங்களில்
வல்லவனாகிய சஃதென்பவனை நாம் சிறைப்படுத்தாது விட்டது கரும மல்ல வென்று கூறினான்.
2516.
முறைததும் பியதை நினைப்பதென்
னினிமேன்
முடித்திடுஞ் சூழ்ச்சியீ
தென்ன
நிறைபெறத் தேர்ந்தொத்
தெவருமோர் கருத்தாய்
நினைப்பது வினைத்திற
மலது
|