பக்கம் எண் :

சீறாப்புராணம்

929


இரண்டாம் பாகம்
 

     மறைபட விருந்து விரைவறத் தூங்கி

           வகுத்திடும் பழியெனக் குறித்துப்

     பொறையுட னிருத்தல் வினைக்கிடங் கொடுத்த

           லெனப்புகன் றனனொரு முதியோன்.

51

      (இ-ள்) அவன் அவ்விதங் கூற, ஓர் விருத்தாப்பியன் கிரமந்ததும்பியதைப் பற்றி இப்போது சிந்திப்பதினால் என்ன பிரயோசனம்? ஒன்று மில்லை. இனிமேல் நாம் நிறைவேற்றும் உபாயமான திஃதென்று யாவர்களும் பூரணமாகத் தெளிந்து பொருந்தி ஒரே எண்ணமாய் எண்ணுவது திறத்தினை யுடைய செய்கையே யல்லாமல் ஒளித்திருந்து மந்தமாகத் தூங்கி இவ்வுலகமானது நிந்தையைக் கூறுமென்று கருதிப் பொறுமையுடனிருப்பது துன்ப மான தொழில்களுக்கு இடங் கொடுப்ப தென்று சொன்னான்.

 

2517. இதத்ததிம் மொழியே முகம்மதென் பவனை

          யிருங்கொலைப் படுத்தலே வேண்டும்

     வதைத்தவ ரிவர்பொன் றினரிவ ரெனுஞ்சொல்

          வழக்கினிற் றோன்றிடா வண்ணம்

     புதைத்தலுக் கிடமுற் றிருக்குமோர் வினையாற்

          பொருந்துவ தன்றிமேற் பழியாய்ச்

     சதித்திட லெவர்க்குந் தகுவதன் றெனவே

          சாற்றின னதிலொரு தலைவன்.

52

      (இ-ள்) அவன் அவ்வாறு சொல்ல, அந்தச் சபையின் கண்ணிருந்த வேறொரு தலைமைத் தனத்தை யுடையவன் இவ் வார்த்தை யானது நன்மையை யுடையது. அந்த முகம்மதென்பவனைத் துன்பத்தைக் கொண்ட கொலைத் தொழில் செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதில் கொன்றவ ரிவரென்னும் கொலை யுண்ட ரிவரென்றும் சொல்லும் வார்த்தை யானது வழக்கத்திற் றோற்றாத வண்ணம் மறைப்பதற்கு இடம்பாட்டைப் பொருந்தி யிருக்கும் ஒப்பற்ற செய்கையினால் நாம் இசைவதேயல்லாமல் மேலும் நிந்தையாகச் சதிவு செய்வது யாவருக்குந் தக்கதல்ல வென்று நிகழ்த்தினான்.

 

2518. நன்கில துறுஞ்சொன் முகம்மதைப் பிடித்தோர்

          மனையினி னள்ளிரு ளடைத்துப்

     புன்கமும் புனலுஞ் சிறிதுத விலவாய்ப்

          போக்குடன் வரத்துமில் லாம

     லின்கணி னெவர்க்குந் தெரிகிலா வண்ண

          மிழைத்தமே லொல்லையி லிறப்பன்

     வன்கொலை தொடரா மறுவுமற் றொழியு

          மெனவுரைத் தனனொரு மதியோன்.

53