பக்கம் எண் :

சீறாப்புராணம்

930


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவன் அவ்விதம் நிகழ்ந்த மற்றொரு அறிவாளன் இப்போதிங்கு பொருந்திய இவ் வார்த்தை யானது நன்மையையுடையதல்ல. அந்த முகம்ம தென்பவனைக் கைகளினாற் பற்றி நெருங்கிய அந்தகாரத்தையுடைய ஒரு வீட்டின் கண் மறியற்படுத்தி அன்னமும் நீரும் கிஞ்சமுங் கொடாது மற்றவர்கள் அவ்விடத்திற் செல்லுதலோடு அவன் வரவு மில்லாமல் யாவர்களுக்கும் அவர்களின் இனிய கண்களில் அவன் தோற்றாத விதத்தில் செய்வோமே யானால் விரைவில் இறந்து படுவான். அதனால் நம்மைக் கொடிய கொலைத் தொழி லானது பின்பற்றாது, களங்கமு மில்லாம லறுந்து நீங்கு மென்று புகன்றான்.

 

2519. இல்லகத் தடைத்து மெனுமொழி யிபுலீ

          செனுமவன் கேட்டிள நகையாய்

     நல்லவை யுரைத்தீ ரடைத்தொரு மனைக்கு

          ணாள்பல கழிந்தபின் பார்க்கின்

     மெல்லணைப் படுத்தங் கிருந்தவர் போல

          வருகுவன் விரைவினிற் பசியே

     தொல்லையி லிறப்பே தவன்றன்வஞ் சனைக்கீ

          துரையல வொழிகவென் றுரைத்தான்.

54

      (இ-ள்) அவ்வாறு வீட்டி னகம் மறியற் படுத்துவோ மென்று நிகழ்த்தும் வார்த்தையை இபுலீ சென்னு மபிதானத்தையுடைய அவன் காதுகளினாற் கேள்வியுற்றுப் புன்சிரிப்போடு நீவிர் நல்ல வார்த்தைகளைக் கூறினீர். அவனை ஒரு வீட்டின் கண் மறியற்படுத்திப் பல நாட்கள் சென்ற பிற்பாடு அவ் வீட்டைத் திறந்து நோக்குவோமேயானால் அவ்விடத்தில் மெதுவாகிய படுக்கையின் மீது சயனித் திருந்தவரை யொத்துச் சீக்கிரத்தில் வருவான் ழுஅவனுக்குப் பசி யென்ப தேது? விரைவிற் சாவேது? அவனுடைய மாயத்திற்கு இஃது பேச்சல்ல, இதை விட்டு விடுங்க ளென்று பகர்ந்தான்.

 

2520. மற்றொரு தலைவன் முகம்மதைப் பிடித்தோ

          ரொட்டையின் வெரிநுற வனைந்து

     பற்றிய வுகிர்க்காற் கொடுவரிக் குழுவு

          மடங்கலுங் கரடியும் பாம்புந்

     துற்றிய வனத்திற் போக்கிடி லவன்ற

          னாமமுந் தொலைந்திடு மிஃதே

     யுற்றதென் றுரைத்தான் கேட்டிபு லீசு

          முளம்வெகுண் டெவரொடு முரைப்பான்.

55