பக்கம் எண் :

சீறாப்புராணம்

931


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவன் அவ்விதம் பகர, வேரொரு தலைமைத் தனத்தை யுடையவன் அந்த முகம்ம தென்பவனைக் கைகளினாற் பற்றி ஓ ரொட்டகையினது முதுகிற் பொருந்தும் வண்ணம் வைத்துக் கட்டி நகங்கள் பொருந்திய கால்களை யுடைய புலிக்கூட்டமும் சிங்கங்களும் கரடிகளும் சர்ப்பங்களும் நெருங்கிய காட்டினிடத்தும் அந்த ஒட்டகத்தைப் போகச் செய்தால் அவனுடைய பெயரும் தொலைந்து போகும். இதுவே பொருந்திய சமாச்சார மென்று செப்பினான். அஃதை இபுலீசு லகுனத்துல்லா காதுகளினாற் கேள்வியுற்று மனமானது கோபமுறப் பெற்று யாவர்களோடும் புகலுவான்.

 

2521. காட்டினில் விடுத்தீர் குடியுறக் கெடுத்தீர்

          கடுவிடப் பாந்தளும் புலியுங்

     கோட்டுடைக் களிறுங் கரடியின் குழுவுங்

          கொணர்ந்துநம் பதியினில் விடுத்து

     வீட்டுவன் குலத்தி னொடுமவன் படித்த

          விச்சையி னாலிஃ தொழிக

     தீட்டுவெண் புகழீர் மறுத்தொரு சூழ்ச்சி

          செப்புமென் றுரைத்தனன் றீயோன்.

56

      (இ-ள்) தீயோனாகிய அவ் விபுலீ சென்பவன் தீட்டா நிற்கும் வெள்ளிய கீர்த்தியை யுடையவர்களே! நீங்கள் அவ்வாறு அவனைக் காட்டி னிடத்து விடுவீர்களே யானால் நமது குலமானது அற்றுப் போகும் படி கெடுத்து விடுவீர்கள். அவன் கற்ற வித்தையினால் அந்தக் காட்டில் வசிக்குங் கொடிய விடத்தையுடைய பாம்புகளையும் புலிகளையும் கொம்புகளை யுடைய யானைகளையும் கரடிகளின் கூட்டங்களையும் கொண்டு வந்து நம்முடைய ஊரில் விட்டு நம்மை நமது கூட்டத்தோடும் கொல்லுவான். இச் சமாச்சாரத்தையும் விட்டு விடுங்கள். வேறேயொரு உபாயஞ் சொல்லுங்க ளென்று கேட்டான்.

 

2522. அவரவ ருரைத்த வசனமு மிபுலீ

          சானவ னுரைத்திடுந் திறனுங்

     கவரறக் கேட்டுப் புந்தியிற் றேர்ந்து

          காவல ரெவரையும் விளித்துப்

     புவியினி லெவர்க்கும் பொருந்துறு மாற்றம்

          புகன்றன ரியானுமென் கருத்துற்

     பவிதருஞ் சூழ்ச்சி யொன்றுள கேண்மி

          னெனஅபூ சகல்பகர்ந் திடுவான்.

57

      (இ-ள்) அவ்வாறு அவரவர்கள் கூறிய சமாச்சாரங்களையும் அவைகளை மறுத்து இபுலீ சென்பவன் கூறிய சமாச்சாரத்தினது