பக்கம் எண் :

சீறாப்புராணம்

94


முதற்பாகம்
 

(இ-ள்) அப்துல்லா அவர்கள் அம்மதீனமா நகரத்தைச் சார்ந்து மதீனத்தின்கண் தங்கிய ரசவருக்கங்களையும் மதீனா நகரத்தையடுத்திரா நின்ற பல வூர்களிலுமுள்ள சரக்குகளையும் விலைக்கு வாங்கிப் பிரகாசத்தைக் கொண்ட ஒரு மாளிகையின் கண் காவலாகக் கட்டி வைத்து விட்டுச் சிலநாள் கழிந்தபிறகு கொள்வோராகிய அவரவர் கைகளில் புதுச்செட்டையுடைய முதல்விலைக்குச் சரக்குகளை விற்றார்கள்.

 

206. வாணி பத்தொழி லனைத்தையு முடித்துமன் னவருங்

    காணு நாட்சில விருந்துதன் பதிவரக் கருதிப்

    பூண ணிந்தழு குறுமிளை யவர்புடை சூழச்

    சேண டைந்தபு வாவெனுந் தலத்தினைச் சேர்ந்தார்.

41

     (இ-ள்) அரசரென்னும் அப்துல்லாவும் மேலே கூறப்பட்டுள்ள செட்டுத் தொழி லெல்லாவற்றையு முடிவு செய்து காணப்படுஞ் சில தினங்களாக அம்மதீனமா நகரத்திலேயே தங்கியிருந்து பின்னர் தமது பதியாகிய மக்காவுக்கு வர நினைத்து ஆபரணங்களைப் பூண்டழகு பொருந்தாநிற்கும் பாலியர்கள் பலர் பக்கத்திற் சூழும்படி அங்கிருந்து வெகுதூரத்தை யடைந்து அபுவாவென்று சொல்லும் தலத்தினில் வந்து சேர்ந்தார்கள்.

 

207. ஆதி கற்பனை யூழ்விதிப் பயனும்வந் தடைந்து

    போது நாட்களு நாழிகைக் கணக்கையும் போக்கி

    நீதி மன்னவ னப்துல்லா தனையறி நினைவாய்ச்

    சோதி மென்முக மிலங்கிடத் துயில்வபோன் றிறந்தார்.

42

     (இ-ள்) நீதியையுடைய அரசரென்னும் அப்துல்லாவானவர் ஆதியான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் கட்டளையென்று சொல்லும் பழவினையான நியமிப்பின் பலன் தமக்குவந்து சேர்ந்து போகாநிற்கும் நாட்களையும் நாழிகையி னெண்ணையும் போக்கித் தந் தன்மையை யின்னதென் றறியும் நினைவினராய்ப் பிரகாசத்தையுடைய முகமானது விளங்கும்படி நித்திரை செய்வதைப் போன்று நிரியாணமானார்கள்.

 

208. கூடிச் சூழ்ந்தவர் விதிப்பய னெனக்குலை குலைந்து

    வாடி மன்னனை யெழில்பெற மணத்துட னடக்கிப்

    பாடி யூரபு வாவைவிட் டகன்றுபோய்ப் பதியை

    நாடி வீந்தவ ராமினாக் கிவையெலா நவின்றார்.

43

     (இ-ள்) அப்துல்லா நிரியாணமானபோது அவ்விடம் திரண்டு சூழ்ந்தவர்களாகிய பந்துக்களனைவரும் இவர் இவ்வாறிடை வழியில் நிரியாணமானது விதியின்பயனென்று மிகப் பதறி வாடி அரசரென்னும் அப்துல்லாவை மார்க்க விதிப்பிரகாரம் அழகு