இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வாறு
கொடுக்க, நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அபூபக்கர் சித்தீகுறலி
யல்லாகு அன்கு அவர்களும் தங்களின் மனங்கள் பொருந்தும்படி வந்த இளம் பருவத்தை யுடைய ஒரு வாலிபனைக்
கூப்பிட்டு வழிக் கூலியும் கொடுத்து இரண் டொட்டகங்களையும் அவனிடத்திற் சேர்த்து மூன்று நாட்கள்
கழிந்த பின்னர் நாலாம் நாளினது இராத்திரியில் தேனைப் பொழியா நிற்குந் தௌறு மலையினது
பொதும்பில் விரைவில் வாவென்று அவன் அறியும் வண்ணம் தாங்கள் செல்லுகின்ற இச் சமாச்சாரங்களையுங்
கூறினார்கள்.
2553.
திரிகைக் கனியு மோதகமுந்
திரட்டித் துகிலிற்
பொதிந்துதம
தருமை மகவா ரசுமாதன்
னரையிற் கயிற்றா
லூறவிறுக்கி
வரிசை மனையார் கொடுப்பவெதிர்
மருவா ருயிரை விசும்பேற்றுங்
குருதி வடிவே லேந்துமலர்க்
கொழுஞ்செங் கரத்திற்
கொண்டனரால்.
88
(இ-ள்) அவ்விதங் கூறிய
பின்னர் அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் தங்களின் சிறப்பினை யுடைய நாயகியார்
முந்திரிகை மரத்தினது பழத்தையும் அப்ப வருக்கத்தையும் ஒன்றாகத் திரளச் செய்து ஓர் வத்திரத்தினால்
மூடித் தங்கள் அருமை மகவா ரான அசுமா வென்பவரின் அரையின் கண்ணுள்ள கயிற்றினாற் பொருந்தும்
வண்ணம் இறுக்கி வரைந்து கொடுக்க, எதிர்க்கா நிற்கும் சத்துராதிகளின் ஆவியை ஆகாயத்தின்
கண் ஏற்றுவிக்கும் இரத்தக் கறையையுடைய கூரிய வேலாயுதத்தைத் தாங்கிய தாமரை மலரை யொத்த செழிய
செந் நிறத்தினது வலது கையால் அதை வாங்கினார்கள்.
2554.
கொறிக டமைமேய்த் தாமீறைக்
குறும்பி னிடத்திற்
றினந்தோறு
முறைய வுரைத்தி ரெனச்சாற்றி
யுயிரோ ருருக்கொண்
டுற்றனைய
சிறுவ ரப்துல் லாவெனும்பேர்ச்
செம்மற் செழுஞ்செங்
கரம்பிடித்து
மறுவி கமழ்ந்த முகம்மதுட
னெழுந்தார் மனையா
டமக்குரைத்தே.
89
(இ-ள்) அவ்வாறு
வாங்கிய அவர்கள் ஆமி றென்பவரை ஆடுகளை மேய்ந்துக் கொண்டு நாங்க ளிருக்குந் தௌறு
|