பக்கம் எண் :

சீறாப்புராணம்

949


New Page 7

இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு தௌறு மலையிற் போய்ச் சேர்ந்து ஒரு குகையின் கண் மூன்று புலிகள் தங்கியிருந்ததை நிகர்த்து நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் வளைக்கா நிற்கும் கோதண்டத்தைக் கொண்ட கையையுடைய வள்ளலாகிய அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு என்னும் சத்திய அறிவினரும் பக்கத்தில் அப்துல்லா வென்னும் அபிதானத்தை யுடைய அந்தச் சிறுவரோடும் இனிமையுடனிருக்க, பருத்த அலைகளை யுடைய பசிய சமுத்திரத்தினது கீழ் திசை யானது சூரிய கிரணத்தினால் வெளுப்புற்றது.

 

2557. மரையு மதியும் பெருவாத

          வதன நபிமா ளிகைப்புறத்தி

     னிரவின் வளைந்து காத்திருந்தோ

          ரெழுமு னிபுலீ செழுந்தனனித்

     திரைவிட் டணிவாய் முகத்தினுமண்

          கண்டான் றிகைத்தா னிருகரத்தால்

     விரைவிற் றுடைத்தான் வாய்ப்பூழ்தி

          யுமிழ்ந்தான் றனைமெய் மறந்தானே.

92

      (இ-ள்) அவ்விதம் கீழ்த்திசை வெளுப்புற, தாமரைப் புட்பமும் சந்திரனும் ஒப்பாகாத முகத்தையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வீட்டினது வெளியில் அவ் விரவில் சூழ்ந்து காத்திருந்தவர்களாகிய அந்தக் காபிர்கள் எழுவதற்கு முன்னர் இபுலீசு லகுனத் துல்லா வென்பவன் தனது உறக்கத்திலும் மண்ணிருக்கும்படி பார்த்துப் பிரமித்து வேகத்தில் இரண்டு கைகளாலுந் துடைத்து வாயின் கண்ணுள்ள தூசியைத் துப்பித் தன்னையும் தனது சரீரத்தையும் மறந்தான்.

 

2558. அவதி யுறக்க மனைவோர்க்கும்

          வருமோ வென்ன வதிசயிப்ப

     வெவரு மிருப்பத் தனிகரப்ப

          திவனோ வெனவா யிதழ்கறிப்ப

     னுவர்மண் ணெவர்வா யினும்புகப்போ

          டுவனோ வெனவு நகைத்துழல்வன்

     புவியிற் பகையும் விளைந்ததெனப்

          பொருமி மனத்திற் புழுங்குவனால்.

93

      (இ-ள்) அவ்வாறு மறந்த அவன் யாவருக்கும் ஆபத்தாகிய இவ்வித நித்திரை வருமா? என்று சொல்லி ஆச்சரியப் படுவான்.