பக்கம் எண் :

சீறாப்புராணம்

950


இரண்டாம் பாகம்
 

எல்லாரும் இங்கு காத்திருக்க ஏகமாய் ஒளித் தோடுவோன் இந்த முகம்மதா? என்று வாயினது அதரங்களைப் பற்களினாற் கறிப்பான் உவரையுடைய மண்ணை அனைவரின்  வாய்களிலும் நுழையும் வண்ணம் போடுவானா? என்று சொல்லிச் சிரித்து உழலுவான். இவ் வுலகத்தின் கண் விரோதமு முண்டாயிற் றென்று பொருமுதலடைந்து மனதின் கண் புழுக்க முறுவான்.

 

2559. எண்ணி யிடைந்து வளைந்துவிழித்

          திருக்கின் றீர்கா ளெவர்வாய்க்கு

     மண்ணை யறைந்தான் முகம்மதென்போன்

          மாயம் விளைத்துப் புறம்போனான்

     பண்ணுந் துயிலி லிறந்தவர்போற்

          கிடந்தாற் பயனும் பெறுவதுண்டோ

     துண்ணென் றெழுமி னெழுமினெனச்

          சொன்னான் மறுத்துஞ் சொன்னானே.

94

      (இ-ள்) அவ்வாறு அவன் சிந்தித்து இடைத லுற்று இங்கு சூழ்ந்து விழித்துக் கொண்டிருந்தவர்களே! முகம்ம தென்பவன் எல்லாருடைய வாயிலும் மண்ணை அடித்தான். கபடத் தொழிலைச் செய்து வீட்டி லிருந்து வெளியிற் போய் விட்டான். நீங்கள் செய்த நித்திரையில் மரித்தவர்களைப் போல் கிடந்தால் அதனாற் பிரயோசனமும் அடைவதுண்டா? இல்லை. ஆதலால் விரைவி லெழும்புங்கள்! எழும்புங்கள்!! என்று சொன்னான். பின்னும் அவ்விதமே சொன்னான்.

 

2560. அதிருந் தொனியா லிபுலீசு

          மறையக் கேட்டு நடுங்கியுடற்

     பதறி யெழுந்தார் சிலர்குழறிப்

          பகர்ந்திட் டெழுந்தார் சிலர்முகத்திற்

     புதயக் கிடந்த பூழ்திதுடைத்

          தெழுந்தார் சிலர்வாய் மண்ணையுமிழ்ந்

     திதென்ன கொடுமை கொடுமையென

           வெழுந்தார் சிலர்நெஞ் சிடைந்தாரே.

95

      (இ-ள்) அந்த இபுலீசு லகுனத் துல்லா வென்பவனும் அவ்வாறு குமுறா நிற்கும் ஓசையோடு சொல்லி, அதைக் காதுகளினாற் கேள்வியுற்று அச்சமடைந்து சில ஜனங்கள் தங்களின் சரீர மானது பதறுதலுற்றெழுந்தார்கள். சில ஜனங்கள் தங்களின் வதனத்தில் மறையும் வண்ணம் கிடந்தமட் புழுதியைத் துடைத்துக் கொண்