பக்கம் எண் :

சீறாப்புராணம்

951


இரண்டாம் பாகம்
 

டெழுந்தார்கள். சில ஜனங்கள் தங்களின் வாயிலிருந்த மண்ணை யுமிழ்ந்து கொண்டு இஃதென்ன பொல்லாங்கு? பொல்லாங்கு? என்று சொல்லிக் கொண்டெழுந்தார்கள். இவ்வாறு யாவர்களும் எழுந்து தங்களின் மனமானது வசங் கெடப் பெற்றார்கள்.

 

2561. குழுமிக் கிடந்த பலதிசையுங்

          குழறி யெழக்கண் டபூசகுலு

     முழுகிக் கிடந்த குலத்தினடு

          வெழுந்தான் முகம்வாய் முழுதினுமண்

     விழுமித் தொழிலியா தெனக்கேட்ப

          விரைவி னிபுலீ சென்பவனியா

     னொழிய வெவர்க்கும் வாயினின்மண்

          விழுந்த தெனக்கட் டுரைத்தனனால்.

96

      (இ-ள்) அவ்வாறு பல திக்கிலும் கூட்டமுற்றுக் கிடந்த ஜனங்கள் உளறிக் கொண்டு எழுந்ததை அபூஜகிலென்பவனுந் தனது கண்களினாற் பார்த்து அங்கு முழுகிக் கிடந்த அந்தத் கூட்டத்தின் மத்தியி லெழுந்தான். அவ்வித மெழும்பி வதனம், வாயாகிய இவைகள் முழுவதிலும் மண்ணானது விழப்பெற்ற இச்செய்கை யானது யாதென்று கேட்க, இபுலீசு லகுனத் துல்லா வென்பவன் என்னைத் தவிர மற்ற யாவர்களுக்கும் வாயில் மண் விழுந்த தென்று விரைவில் கட்டான வார்த்தையைச் சொன்னான்.

 

2562. எடுக்கு முவர்மண் ணெடுத்தினத்தோ

          ரெவர்வா யிடத்தும் புகுத்திக்குடி

     கெடுக்கும் படிக்குக் கெடுத்தெழுந்து

          கிளத்துந் தனது மறைநெறியி

     னடுக்கு மவர்கள் வயினடைந்தா

          னவனா லினிமே னமதினத்திற்

     றொடுக்கும் பகையைத் துடைப்பவர்க

          ளிலையென் றிவையுஞ் சொன்னானே.

97

      (இ-ள்) அந்த முகம்ம தென்பவன் உவரைத் தாங்கா நிற்கும் மண்ணைக் கையினா லெடுத்து நமது கூட்டத்தார் களியாவரின் வாய்களினிடத்தும் புகச் செய்து நமது குடியைக் கெடுக்கும் வண்ணம் கெடுத்து எழும்பிக் கூறுகின்ற தனது வேதநெறியில் சேர்ந்த அந்தத் திரு மதீனமா நகரத்தார்க ளிடத்திற் போய்ச் சேர்ந்தான். இனிமேல் அவன் நமது கூட்டத்தில் ஆரம்பியா நிற்கும் போர்த்தொழிலை யில்லாமல் ஒழிப்பவர்க ளில்லையென்று இச் சமாச்சாரங்களையுங் கூறினான்.