இரண்டாம் பாகம்
2573.
விரலிட வரிதாய் நின்ற வேய்வனத்
திடத்துஞ் சாய்ந்த
பருவரைத் துறுகற் பாங்கும்
பருதியின் கரம்பு காமற்
செருகிய கடத்துந் தேடிச் சேரலர்
சிலம்பி நூலாற்
புரையறப் போர்த்து வைகும்
பொதும்பரின் வாயில் வந்தார்.
108
(இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த
அந்தச் சத்துராதியாகிய காபிர்கள் விர லிடுவதற்கு அரிதாய் நிற்கப் பெற்ற மூங்கிற் காட்டினிடத்தும்
சரிந்த பெரிய மலையினது நெருங்கிய கற்களி னிடத்தும் சூரிய கிரணங்கள் நுழையாமல் அடைசிய அரிய
நெறிகளினிடத்தும் விசாரித்துச் சிலந்திப் பூச்சிகள் குற்ற மறத் தமது நூலால் மூடி யுறையா நிற்கும்
அந்தப் பொதும்பி னிடத்து வந்தார்கள்.
2574.
கரத்திலேந் தியவை வேலுங்
காலிணைக் கபுசு நீண்ட
வுரத்தினு முகத்தும் வேர்வை
யுதிர்ப்பொடுங் காபிர் கூண்ட
வரத்தினை யிருகண் ணார மன்னபூ
பக்கர் நோக்கித்
திருத்துமெய் யிற்சூ லுல்லா
செம்முகம் பார்த்துச் சொல்வார்.
109
(இ-ள்) கைகளிற்
றாங்கிய கூரிய வேலாயுதமும் இரு பாதங்களினிடத்துப் பாத ரட்சையும் நீட்சியுற்ற மார்பின் கண்ணும்
முகத்தின் கண்ணும் வேர்வையினது சிந்துத லுடனும் அக்காபிர்களாகிய சத்துராதிகள் அவ்வாறு வந்து
கூடிய வரவை அரசராகிய அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் இரண்டு கண்களினாலும்
பொருந்தும் வண்ணம் பார்த்துச் சத்திய நெறியில் யாவர்களையுஞ் செவ்வைப் படுத்தா நிற்கும்
அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் செந்நிற மாகிய தாமரை மலரை நிகர்த்த வதனத்தைப் பார்த்துச்
சொல்லுவார்கள்.
2575.
இரவினி லிருளி னூர்விட் டிவணிடை
யடைந்தோ மாற்றா
ரருவரை யிடத்துந் தேடி யடைந்தனர்
முழந்தாண் மட்டுந்
தெரிவது நமக்கிங் கன்னோர்
திறத்தொடுங் கவிழ்ந்து நோக்கின்
விரைவொடுங் காண்ப ரென்ன
வேதியர்க் கெடுத்துச் சொன்னார்.
110
(இ-ள்) நாம் இராப்
பொழுதி னந்தகாரத்தில் நமது பதியாகிய திரு மக்கமா நகரத்தை விடுத்து இந்தத் தௌறு மலையின்
கண் வந்து சேர்ந்தோம். சத்துராதியாகிய அந்தக் காபிர்கள் அருமையான இந்த மலையின் கண்ணும்
விசாரித்து வந்து சேர்ந்தார்கள். நமது பார்வைக்கு அவர்களின் முழந்தாள் வரையுந் தோற்றுகின்றது.
இந்த மலையின் கண்ணும் விசாரித்து வந்து சேர்ந்தார்கள். நமது பார்வைக்கு அவர்களின் முழந்தாள்
வரையுந் தோற்றுகின்றது. இந்தச் சத்துராதிகள் வலிமை யோடும் நம்மைக் கவிழ்ந்து
|