பக்கம் எண் :

சீறாப்புராணம்

958


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) இந்தப் படிச் சில காபிர்கள் சொல்ல, யாவரும் காதுகளினாற் கேள்வியுற்று எப் பக்கங்களிலும் பார்த்து மேகங்களாற் படிந்த குடையை யுடைய வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் காணோமென்று சொல்லிச் சமாதான மற்ற மனதுடன் நொந்து கெட்டு மெய்ப்புடன் வெயர்வை யானது சிந்தும் வண்ணம் அந்தத் தௌறு மலையை விடுத்து நீங்கி அங்குள்ள காடுகளைச் சுற்றித் தங்களிடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2579. முகம்மதின் புகழைப் போற்றி வகுதைவா ழபுல்கா சீந்தன்

     னகமலர் களிக்கு மாறா யணிச்சிறைப் பறவை யாவு

     மிகலவர் போனா ரென்ன விதயங்க ளுறப்பூ ரித்துப்

     புகரறக் கூவிச் சுற்றிப் பொருப்பைவிட் டகன்றி டாதே.

114

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் போக, இந்நூலின் கொடை நாயகனான வகுதை நகரத்தில் வாழ்ந்த அபூல் காசீ மென்பவன் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் கீர்த்தியைச் சொல்லித் துதித்துத் தனது மனமாகிய தாமரை யானது சந்தோஷிக்கப் பெற்ற வாறாக அழகிய சிறகுகளை யுடைய பறவைக ளியாவும் சத்துராதிகளாகிய அந்தக் காபிர்கள் தங்களிடத்தை நோக்கிச் சென்றார்க ளென்று மனங்களானவை பொருந்தும் வண்ணம் பூரிக்கப் பெற்றுக் குற்ற மற அந்தத் தௌறு மலையை விடுத்தும் நீங்காமல் தங்கியிருந்தன.