பக்கம் எண் :

சீறாப்புராணம்

96


முதற்பாகம்
 

பிரயோசனமோ! சம்பவித்தது என்னவென்று யாங்களறிந்தே மிலையேயென மிகப்பதைத்து அந்தோவென்று அலறி உடல்கள் தளரும்படி யழுதார்கள்.

 

212. உடுத்த பூமியிற் புதைமணி யெனவுட லொடுங்கி

    வடித்த கண்ணினீ ரொழுகிட விருந்தபொன் மயிலை

    யடுத்து வந்திருந் தன்புட னப்துல்முத் தலிபு

    தொடுத்த துன்பங்க ளாற்றிநல் வழிபல சொன்னார்.

47

     (இ-ள்) இவ்வாறாகவிருக்கு மந்நேரத்திலே ஆமினா அவர்களின் மாமனாராகிய அப்துல் முத்தலிபானவர்கள் தரித்த பூழ்தியின்கண் புதைந்த விரத்தினத்தைப் போன்று கூர்மைபொருந்திய கண்களினின்றும் ஜலமானது சிந்தும்படி உடலமொடுங்கியிருந்த அழகிய மயிலாகிய ஆமினா அவர்களை நெருங்கிவந் துட்கார்ந்து கிருபையோடும் அந்நாயகியைப் பற்றிய துன்பங்களெல்லாவற்றையும் ஒருவாறமர்த்திச் சன்மார்க்கமான பலவற்றையுமெடுத்துச் சொன்னார்கள்.

 

213. இனத்து ளார்சொலு நல்வழிக் குருகிநெஞ் சிடைந்து

    நினைத்த பற்பல துன்பமு மகற்றிநீ ணிலத்தி

    லனைத்தை யும்விதித் தவன்செய லினையுமுற் றறிந்து

    மனத்தி னிற்றெளி வாகினர் குலக்கொடி மயிலே.

48

     (இ-ள்) குலத்திற் கோர் கொடிபோலு மயிலாகிய ஆமினா அவர்கள் அப்துல் முத்தலிபு முதலிய அங்குற்றிருந்த பந்துக்களால் சொல்லும் சன்மார்க்கத்திற்காகக் கரைந்து மனமானது வசக்கேடுற்று எண்ணிய நானாவிதத் துன்பங்க ளெல்லாவற்றையும் நீக்கி நீட்சிபொருந்திய இப்பூமண்டலத்தின்கண் நடைபெறும் எல்லாக் காரியங்களையும் உண்டாக்கின கடவுளினது செயலையு முடிவறவறிந்து மனதின்கண் ஒருவாறு தெளிவாயினார்கள்.

 

214. தவிசி ருந்துநன் னெறிமுறை நடத்துதா வூது

    நபியுந் திங்களோ ரேழினிற் கனவினி னவின்றா

    ரவியுங் காலமன் றாட்டத்துக் குரியவ ரானோர்

    புவியி னிற்பெயர் முகம்மதென் றிடுமெனப் போந்தே.

49

     (இ-ள்) கருப்பமாகிய வொப்பற்ற ஏழாமாதத்திலே ஆமினா அவர்களின் சொப்பனத்தில் ஆசனத்தின்கண் அரசராய் வீற்றிருந்து சன்மார்க்கத்தையும், அதனொழுங்குகளையும் நடத்திய நபிப்பட்டம் பெற்ற தாவூது அலைகிஸ்ஸலாமவர்கள் வந்து ஆமினாவே! உன் வயிற்றின்கண் தங்கியிருக்கும் பிள்ளையானவர் இப்பிரபஞ்சம் அழியுங்காலத்தில் தமது கூட்டத்தாரின் பாவமன்னிப்புக்காகக் கடவுளினிடத்தில்