பக்கம் எண் :

சீறாப்புராணம்

97


முதற்பாகம்
 

மன்றாட்டத்திற்குரிய தன்மையையுடையவர். அவருக்கு இப்பூமியில் முஹம்மதென்று பெயரிடுவாயாகவென்று சொன்னார்கள்.

 

215. நலங்கொ டிங்களோ ரெட்டினில் சுலையுமா னபிவந்

    திலங்கு பூணணி மயிலனீர் நின்வயிற் றிருந்தோர்

    பெலன்கெ ழுமது னான்கிளைப் பேரொளி நபியாய்த்

    துலங்க வந்தவர் பெயர்முகம் மதுவெனச் சொன்னார்.

50

     (இ-ள்) நன்மையைக் கொண்ட வொப்பற்ற எட்டா மாதத்திலே நபிப்பட்டம் பெற்ற சுலையுமான் அலைகிஸ்ஸலாமவர்கள் ஆமினா அவர்களின் சொப்பனத்தில் வந்து பிரகாசியாநிற்கும் ஆபரணாதிகளையணிந்த மயில்போலும் சாயலையுடைய ஆமினாவே! உனது வயிற்றின்கண் இருக்கும் பிள்ளையானவர் வலிமைபெறும் அதுனானென்கிற வம்சத்தின் பெரிய பிரகாசத்தையுடைய நபியாகி எவ்விடத்தும் எக்காலத்தும் விளங்க வந்தவர். அவர் பெயர் முஹம்மதாக இருக்குமென்று சொன்னார்கள்.

 

216. மாத மொன்பதி லாமினாக் கனவினின் மதித்தே

    வேத நான்மறை நேர்வழிக் குரியவர் விளங்கக்

    கோதை யேபெறின் முகம்மது வெனப்பெயர் கூறென்

    றாதி நாயகன் வரிசையீ சாநபி யறைந்தார்.

51

     (இ-ள்) கருப்பமாகிய ஒன்பதா மாதத்திலே முதன்மையான எப்பொருட்கட்கு மிறையவனாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் சங்கை பொருந்திய நபிப்பட்டம் பெற்ற ஈசா அலைகிஸ்ஸலாமவர்கள் ஆமினா அவர்களின் சொப்பனத்தில் மதிப்பிட்டு வந்து, கோதாய்! உனது வயிற்றின்கண் ணிருக்கின்ற சந்ததியானவர் அறிவினையுடைய தௌறாத்து சபூறு இஞ்சீல் புறுகான் என்னும் நான்கு வேதங்களினது நேரான மார்க்கத்திற்குச் சொந்தமாக்கப்பட்டவர். அவரை எவ்விடத்தும் எக்காலத்தும் விளங்கும்படி சீ பெறுவையாயின் முஹம்மதுவென அவருக்குப் பெயர் கூறுவாயாக வென்று சொன்னார்கள்.

 

217. ஈத லாலிமை யவர்தின மிடைவிடுத் திலராய்ப்

    போது சேர்குழ லாமினா கனவினிற் போந்தே

    யாதி தூதுவர் முகம்மது பெயரென வதிக

    நீதி யானமா ராயமே பெறநிகழ்த் தினரால்.

52

      இதுவேயுமன்றி வானவர்கள் தினமுமிடை விடாதவர்களாய் பூக்கள் பொருந்திய கூந்தலையுடைய ஆமினா அவர்களின் சொப்பனத்தில் வந்து, ஆமினாவே! உனது வயிற்றின்கண் இருக்கும்