பக்கம் எண் :

சீறாப்புராணம்

961


இரண்டாம் பாகம்
 

2585. அடைத்தவப் புடையை நீக்கி யகுமதுக் கணித்தாய் வேறோ

     ரிடத்துறும் வளையிற் சர்ப்ப மெதிர்ந்தது கண்டு தேங்கிப்

     படத்தினி லொருபாற் கீறிப் பதுமமென் கரத்தை நீட்டி

     விடத்தினுக் கஞ்சி யேதும் வெளியறப் புகுத்தினாரால்.

6

      (இ-ள்) அவ்விதம் அடைத்த அந்தத் துவாரத்தை யொழித்து அஹ்மதென்னுந் திருநாமத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குச் சமீபமாகப் பிறிதோரிடத்திற் பொருந்திய துவாரத்தின் கண் அந்தச் சர்ப்ப மானது எதிர்ப்பட்டதை அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் பார்த்துப் பயந்து அதன் விடத்திற்காகப் பதறி முன் கீறிய அவ் வஸ்திரத்தில் ஓர் பக்கத்தைக் கிழித்துத் தாமரை மலர் போன்ற மெல்லிய தங்களின் கையை நீட்டி அத் துவாரத்திலும் கொஞ்சமும் வெளியில்லாமல் அவ் வஸ்திரத்தைப் புகுத்தினார்கள்.

 

2586. மற்றொரு வளையிற் றோன்ற வடைத்தனர் பொதும்பர் வாயிற்

     சுற்றிய வளைக டோறுந் தோன்றிய துகிலைக் கீறி

     முற்றினு மடைத்தா ரோர்பான் முழையினுக் காடை காணா

     துற்றுள மிடைந்து வாடி யுருகினர் துயிற லோர்ந்தே.

7

      (இ-ள்) அவ்வாறு புகுத்த அச் சர்ப்பமும் வேறோர் துவாரத்தில் வெளியாக, அத் துவாரத்தையும் அவ் வத்திரத்தினாலடைத்தார்கள். அது மறுத்தும் அப் பொதும்பி னிடத்துச் சூழ்ந்து துவாரங்க ளெல்லாவற்றிலும் வந்து வந்து வெளியாயிற்று. அவர்களும்  அவ்வத்திரத்தைக் கிழித்து அத் துவாரங்கள் முழுவதையும் அடைத்தார்கள். ஒரு பக்கத்திலுள்ள ஓர் துவாரத்திற்குத் தங்களிட மிருந்த அவ் வத்திரம் பற்றாமற் பொருந்திய மனமானது வருந்துதலுறப் பெற்று மெலிந்து நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நித்திரை செய்வதைச் சிந்தித் துருகினார்கள்.

 

2587. ஒருவளை யன்றி யாவு மடைத்தன முரக மீங்கு

     வருமெனின் மறைப்ப யாது மிலைத்திரு வள்ள லார்நித்

     திரைமறுத் திடுத னன்றன் றெனவுட றிடுக்கிட் டேங்கிப்

     பருவரல் சுமந்து நின்றான் பணிவர வறிகி லாரே.

8

      (இ-ள்) அவ்வித முருகி அச் சர்ப்பத்தின் வரவை இன்ன தென்றுணராதவர்களான அவ் வபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்கள் நாம் ஒரு துவாரமே யல்லாமல் மற்ற துவாரங்களெல்லாவற்றையும் வத்திரத்தினால் அடைத்து விட்டோம். அச் சர்ப்பமானது இந்த ஒற்றைத் துவாரத்திலும்