பக்கம் எண் :

சீறாப்புராணம்

971


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் பொருந்திப் பழமையான கொடிய செய்கையானது பின் பற்றா நிற்கும் பாவத்தை யொழித்து நன்மை பொருந்திய சுவர்க்க லோகத்தி னெல்லையை யுடைய பதவியானது இன்றையத் தினம் நமக்குக் கிடைக்கப் பெற்ற தென்று நகர்ந்து சென்று விரைவில் இந்த மலை முழுவதுந் தேடிப் பார்த்தேன். அவ்வாறு பார்த்து இரண்டு கண்களும் மகிழும் வண்ணம் பிரகாசியா நிற்கும் இம் மலைக்குகையி னிடத்துத் தங்களைக் கண்டேன்.

 

2615. வரைமு ழைச்சிறு வாயிலிற் சிலம்பிநூன் மறைப்ப

     விரிசி றைப்புற விருப்பது நோக்கினன் விரைவிற்

     பெருகுங் காப்பழித் திடுவதன் றெனப்பிரிந் தொதுங்கிப்

     புரைய றத்தனி மற்றொரு வளையினிற் புகுந்தேன்.

36

      (இ-ள்) அவ்வாறு கண்ட இம் மலைக் குகையினது சிறிய வாயிலினிடத்துச் சிலந்திப் பூச்சிகள் தங்களின் நூற்களினால் மூடவும் விரிந்த சிறகுகளை யுடைய புறாக்கள் இருப்பதையுங் கண்களினாற் பார்த்து வேகத்திலோங்கா நிற்கும் காவலை அழிப்பது தகாதென்று நினைத்து அவ்விடத்தை விட்டும் ஒதுங்கிச் சென்று குற்றமறும்படி பிறிதொரு வளைவின் கண் ஒப்பறப் போய் நுழைந்தேன்.

 

2616. சிறுப்பு ழைக்குளென் னெட்டுட லொடுங்கிடச் செருகிப்

     புறப்ப டுந்திசை யனைத்தையு மடைத்தனர் புழுங்கி

     வெறுப்பொ டுமிருந் தொருவயின் மேவினன் விரைவின்

     மறைப்ப டத்தடத் தாள்கொடவ் வளையையு மறைத்தார்.

37

      (இ-ள்) சிறிய துவாரத்திற்குள் அவ்வாறு எனது நெடிய சரீரமானது ஒடுங்கும் வண்ணம் சொருகி வெளிப்படா நிற்கும் திசைக ளெல்லாவற்றையும் இவர்கள் அடைத்தார்கள். அதனால் மனமானது புழுக்கமுறப் பெற்று வேண்டாமையுடனிருந்து வேகமாய் ஓர் துவாரத்தின் கண் வந்து பொருந்தினேன். அத் துவாரத்தையும் மறைவு படும்படி பெரிய தங்களின் பாதத்தைக் கொண்டும் அடைத்தார்கள்.

 

2617. வரையி னிற்புற மகலவும் வழியிலா துமது

     திரும லர்ப்பதங் காணவுஞ் செயலிலா தழிந்து

     முரித ரும்படிக் குவட்டுளை யிடந்தொறு முடங்கித்

     திரித லல்லது வெளிப்பட லரிதெனத் திகைத்தேன்.

38

      (இ-ள்) அவ்விதம் அவர்கள் அடைக்க, இம் மலையின் கண் வெளியில் அகன்று செல்லவும் மார்க்க மில்லாது உங்கள் தெய்வீகந் தங்கிய தாமரை மலரை சரணங்களைக் கண்களினாற்