பக்கம் எண் :

சீறாப்புராணம்

981


இரண்டாம் பாகம்
 

2643. மந்த ரப்புய முகம்மது மதிமுக நோக்கிக்

     கந்த மென்மலர்ப் பதமிரு கரங்கொடு தடவி

     யெந்தை யீர்பவந் துடைத்தன னெனப் புகழ்ந் திடையன்

     புந்தி கூர்தரக் கொறியொடும் வனத்திடைப் போனான்.

18

      (இ-ள்) அவ்வாறு அவர்கள் அருந்த அந்த இடையன் மலையைப் போலுந் தோள்களை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் சந்திரனை நிகர்த்த வதனத்தைக் கண்களாற் பார்த்து வாசனையைக் கொண்ட மெல்லிய தாமரைப் புட்பத்தை யொத்த இரு சரணங்களையுந் தனதிரண்டு கைகளைக் கொண்டுந் தடவி எனது தந்தையாகிய நபிகட் பெருமானே! யான் எனது பாவத்தை யில்லாமல் துடைக்கப் பெற்றேனென்று துதித்து மனமானது சந்தோஷிக்கும் வண்ணம் தனது ஆட்டுக் கூட்டங்களோடும் காட்டின் கண் போய்ச் சேர்ந்தான்.

 

2644. இருந்த நாயக ரிருவரு மிவணெடு நேரம்

     பொருந்த றீதென வத்திரிப் புறத்தணை விசித்து

     வருந்தி லாதெழுந் தருங்கட நெறிகளை மறுத்துத்

     திருந்து நன்னெறி யிஃதென விரைவொடுஞ் சென்றார்.

19

      (இ-ள்) அவன் அவ்விதம் போய்ச் சேர, அங்கு தங்கியிருந்த அரசர்களான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும், அவ்வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் நாம் இவ்விடத்தில் அதிக நேரம் சார்ந்து தங்கியிருப்பது குற்றமென்று சொல்லி ஒட்டகத்தின் முதுகின் மீது அணையாகிய தவிசை வைத்துக் கட்டித் துன்ப மின்றி யெழும்பி அருமையான காட்டினது பாதைகளை நீக்கித் திருந்திய நல்ல பாதையானது இஃதென்று சொல்லி ஓர் பாதையி னிடத்து விரைவுடன் நடந்து சென்றார்கள்.

 

2645. இகன்ம னத்தபூ சகல்விடு மொற்றர்க ளியாரும்

     பகும னத்தொடும் மன்னெறி தொறுந்தொறும் படர்ந்தார்

     சகியி லாதொரு கொடியவன் றனித்தொரு பரிமேற்

     றிகைம றுத்தவ ரிருவரும் வருநெறி சேர்ந்தான்.

20

      (இ-ள்) அவ்வாறு செல்ல, பகையைக் கொண்ட இருதயத்தையுடைய அபூஜகி லென்பவன் இவர்களைத் தேடி விட்ட தூதர்க ளெல்லாரும் பல சிந்தனையுடன் மிக வாகிய பாதைக ளெல்லாவற்றிலும் பரவிச் சென்றார்கள். அவ்விதஞ் சென்றோர்களில் கொடுமையை யுடைய ஒரு தூதன் ஏகமாய்ப் பொறுமையின்றி ஒரு குதிரையின் மீது தனது திசையை நீக்கி அந் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல்