பக்கம் எண் :

சீறாப்புராணம்

982


இரண்டாம் பாகம்
 

சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் செல்லுகின்ற அப் பாதையின் கண் வந்து சேர்ந்தான்.

 

2646. கிள்ளை வேகமும் வலக்கரங் கிடந்தவெள் வேலும்

     வெள்ளை மென்றுகிற் கஞ்சுகி நனைதரும் வெயர்வுந்

     துள்ளி நாற்றிசை பரப்பிய துணைவிழி களுமாக்

     கள்ள வன்மனத் தவன்வரும் வரவினைக் கண்டார்.

21

      (இ-ள்) குதிரையினது வேகமும் வலது கையினிடத்துக் கிடக்கப் பெற்ற வெள்ளிய  வேலாயுதமும் வெண்ணிறத்தையுடைய மெல்லிய வத்திரத்தா லாகிய சட்டை யானது நனைகின்ற வெயர்வும் குதித்து நான்கு திக்குகளினிடத்தும் பரப்பிய இரு கண்களுமாய்ப் பொய்மையை யுடைய கொடிய மனத்தினனான அந்தத் தூதுவன் அவ்வாறு வந்த வரவை நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் தங்ளின் கண்களினாற் பார்த்தார்கள்.

 

2647. மாதி ரத்தினை யடந்ததிண் புயத்தபூ பக்கர்

     சீத மெய்நறை முகம்மது திருமுக நோக்கி

     வேத னைத்தொழி லபூசகல் திசைதொறும் விடுத்த

     தூத ரினுள னலதுவே றலனெனச் சொன்னார்.

22

      (இ-ள்) அவ்வாறு பார்த்து மலைகளை யடர்க்கா நிற்குந் திண்ணிய தோள்களை யுடைய அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் குளிர்ச்சி தங்கிய கத்தூரி வாசனையைக் கொண்ட காத்திரத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் தெய்வீக முற்ற வதனத்தைப் பார்த்து இவன் துன்பத்தைக் கொண்ட தொழிலை யுடைய அபூஜகி லென்பவன் திக்குகளெல்லாவற்றிலும் விட்ட தூதர்களி லுள்ளவனே யல்லாமல் மற்றவனவல்ல னென்று சொன்னார்கள்.

 

2648. கசைபு றம்புடைத் திடப்புவி யதிர்ந்திடக் கலிமா

     விசையும் வேகமுங் கையினிற் சுழற்றிய வேலு

     நசைவி டாதுகொண் டிவணடுத் தனனிக னடப்ப

     விசைவன் வேறினி யுரைப்பதின் றென்னவு மிசைத்தார்.

23

      (இ-ள்) அன்றியும், கசையானது பின்பக்கத்தில் அடிக்கவும் பூமி அதிரவும் வலிமையை யுடைய குதிரையினது விசையும் வேகமும் கையிற் சுற்றிய வேலாயுதமும் கொண்டு தனது

சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் செல்லுகின்ற அப் பாதையின் கண் வந்து சேர்ந்தான்.