இரண்டாம் பாகம்
குற்றத்தை விடாமல்
இவ்விடத்தில் வந்து நெருங்கினவனான இவன் கலகமானது நடக்கும் வண்ணம் பொருந்துவான். இனி வேறு
சொல்லுவது ஒன்றுமில்லையென்றுங் கூறினார்கள்.
2649.
வலிய வெம்பகை வளைந்திடிற்
றனித்தவர் மனத்தி
னலிவி லாதெதிர்ந் தடருதல்
தீனடு நிலைமை
கலியி தென்கொலென்
றையுறல் கலங்குத லீமா
னிலையும் வீரமும்
புறம்விடுத் திடுபவர் நெறியே.
24
(இ-ள்) அவர்கள்
அவ்வாறு கூற, வலிய வெவ்விய பகைமை யானது வந்து சூழில் தனித்தவர்கள் தங்க ளிதயத்தின் கண்
யாதொரு மெலிவுமில்லாமல் எதிர்த்துப் பொருதுவதே தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்
மார்க்கத்தினது நீதியாகும். இஃது என்ன கேடான விடய மென்று சந்தேகிப்பதும் அச்சப்படுவதும்
ஈமானின் நிலை பரத்தையும் தனது வீரத்தையும் புறம் விடுவோர்களின் மார்க்கமாகும்.
2650.
இறுதி யற்றவ னொருவனா
மிருவரிங் கெய்தி
மறமு திர்ந்தெதிர் வருபவ
னொருவன்மற் றிவனாற்
பெறுவ தென்கொலென்
றுரைத்தனர் தீனிலை பிரிக்குஞ்
செறுந ராகிய விலங்கினங்
கெடவருஞ் சீயம்.
25
(இ-ள்) அன்றியும்,
முடிவற்றவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் ஒருவன், நாம் இருவர், இவ்விடத்திற் கோபமானது
முற்றும் வண்ணம் நமக்கு எதிராகப் பொருந்தி வருவோனாகிய இவன் ஒருவன், இவனால் நாமடைவதென்ன?
ஒன்றுமில்லை யென்று தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினது நிலை பரத்தைப் பிரிக்கா
நிற்கும் சத்துராதியாகிய மிருகக் கூட்டமானது கெடும்படி வந்த சிங்கமாகிய நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கூறினார்கள்.
2651.
புறாக்கத் தும்பறந்
துயவும்பா சடைத்தருப் பொரிய
மறாக்க திர்க்கதி ரவன்சுடு
நெடுஞ்சுர வழியி
னுறாக்க டும்விசைக்
குசைப்பரி கடிதிற்கொண் டோடிச்
சுறாக்கத் தென்பவன்
களிப்பொடு மடுத்தனன் றொடர்ந்தான்.
26
(இ-ள்) அவர்கள்
அவ்வாறு கூற, சத்தியாநிற்கும் புறாக்கள் பறந்து பிழைக்கவும், பசிய தழைகளை யுடைய
விருச்சங்கள் கரிந்து பொரி யாகவும், எழுச்சியைக் கொண்ட கிரணங்களை யுடைய சூரியனானவன்
சுடுகின்ற நீண்ட பாலை நிலத்தினது அம் மார்க்கத்தின் கண் கொடிய விசையைப் பொருந்திய புற
|