இரண்டாம் பாகம்
மயிரையுடைய குதிரையை விரைவிற்
கொண்டு சுறாக்கத் தென்னும் அபிதானத்தை யுடைய அந்தக் காபிரானவன் மகிழ்ச்சியோடும்
இவர்களைத் தேடிப் பின்பற்றி நெருங்கி ஓடி வந்தான்.
2652.
அடுத்த வெம்பகை வனைமனத்
திடையதி சயித்துப்
படுத்த மண்டனை
நோக்கியிப் பாதகன் பரியை
விடுத்தி டாவிழுங் காவகைக்
குளம்பினை விசித்துப்
பிடித்தி டென்றனர் தூதெனத்
தீனிலை பிடித்தோர்.
27
(இ-ள்) அவ்விதம் வந்த
கொடிய சத்துராதி யாகிய அந்தச் சுறாக்கத் தென்பவனை றசூ லென்று சொல்லும்படி தீனுல் இஸ்லா
மென்னும் மார்க்க நிலைமையைப் பிடித்தவர்க ளான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கிடக்கப் பெற்ற
இப் பூமியை நோக்கி இந்தப் பாதகனின் குதிரையை விடாமலும் விழுங்காமலு முள்ள விதத்தில் அதன்
குளம்பைக் கட்டிப் பிடிப்பாயாக வென்று கட்டளை யிட்டார்கள்.
2653.
ஈண்டு வல்லவன் றூதர்தந்
திருமொழிக் கியைய
வேண்டு மல்லது வெறுத்திட
லரிதென விரும்பித்
தூண்டி வந்தவன் பரியினாற்
குளம்பையுஞ் சுருக்கிப்
பூண்ட ரங்கெனப் பிடித்தது
கடனடுப் புடவி.
28
(இ-ள்) வல்லவ னாகிய
அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு இங்கு கூறிய அந்தத் தெய்வீகந் தங்கிய
வார்த்தைகளுக்குப் பொருந்த வேண்டுமே யல்லாமல் அவ் வார்த்தைகளை மறுக்கக் கூடாதென்று
சமுத்திர மத்தியி லுள்ள இப் பூமியானது கருதித் தனது பரியை நடாத்தி வந்தவ னாகிய அந்தச்
சுறாக்கத் தென்பவனின் அக் குதிரையினது நான்கு காற் குளம்புகளையும் அடக்கிப் பூணைக் கொண்ட
தரங் கென்று செல்லும் வண்ணம் பிடித்தது.
2654.
புதிய சித்திர மெனப்புரி
நூலுடைக் குயவன்
சுதையி னாற்சமைத் திடுபரி
யென்னவுந் துணுக்காக்
குதியி லாதுதை யாவளை
முகங்குழை யாது
பதிய நின்றது கொடியவன்
விடுநெடும் பரியே.
29
(இ-ள்) அவ்வாறு,
பிடிக்க, கொடியவ னாகிய அந்தச் சுறாக்கத் தென்பவன் விடுத்த நெடிய அக் குதிரை யானது நூதன மான
ஓர் சித்திரத்தைப் போன்றும் முறுக்கைக் கொண்ட பூணூலை யுடைய குயவ னானவன் வெண் சுண்ணச்
சாந்தினாற் செய்த
|