இரண்டாம் பாகம்
குதிரையைப் போன்றும்
பயத்துடன் பாயாமலும் உதையாமலும் வளைந்த தனது முகத்தைக் குழையாமலும் பூமியி னிடத்து அழுந்தும்
வண்ணம் நின்றது.
2655.
கடிய வெம்பரி நடந்தில
வெனமனங் கனன்று
நெடிய மத்திகை விசைதர
வங்கையி னிமிர
வடிய டித்தனன் காலினிற்
புடைத்தன னனைய
கொடுமை யாற்றலை யசைத்தது
நடந்தில குதிரை.
30
(இ-ள்) அவ்விதம்
நிற்க, அவன் வேகத்தை யுடைய கொடிய அக்குதிரை யானது நடக்கவில்லை யென்று மன மானது கோபமுறப்
பெற்று நீண்ட சம்மட்டி விரையும் வண்ணம் அழகிய கையினால் நிமிரும்படி மிகவும் அடித்தான்.
காற்களினால் உதைத்தான். அப்படிப்பட்ட பொல்லாங்குகளினால் அக் குதிரை யானது தனது சிரத்தை
ஆட்டிற்று, நடக்கவில்லை.
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
2656.
தொலைதொடர்ந்தெய்த்
திடுங்குணமோ கடுவிசையாற்
குளம்புதுண்டப் பட்ட
தோமெய்
மலைதரவஞ் சனைவிளக்கு
முகம்மதுசெய்
வினைத்திறனோ மாய
மியாதென்
றுலைவுறுநெஞ் சினனாகிக்
கவிழ்ந்துநோக்
கலும்வேக மொடுங்க
வாசி
நிலைபடநாற் குளம்பையும்
தலம்புதையப்
பிடித்திறுக்கி
நெருக்கக் கண்டான்.
31
(இ-ள்) அவ்வாறு
நடக்காது நிற்க, அதிக தூரம் நடந்து சென்று இளைத்த பண்போ? அல்லது கடிய வேகத்தினால் குளம்
பானது கண்டப் பட்டதோ? சரீரமானது மயக்க முறும் வண்ணம் வஞ்சகத்தைச் செய்யும் அந்த முகம்ம
தென்பவ னியற்றிய தொழிலினது வல்லமையோ? இவற்றில் யாதென்று சொல்லி அவன் அச்சத்தைப்
பொருந்திய மனத்தை யுடைவ னாகிக் குனிந்து பார்த்த மாத்திரத்தில் அக் குதிரையானது தனது தீவர
மொடுங்க நிலைக்கும்படி நான்கு காற் குளம்புகளையும் இப் பூமியானது அழுந்தும் வண்ணம் பற்றி
இறுக்கி நெருக்க நோக்கினான்.
2657.
துரகதத்தின்
பதத்தினைப்பூப் பிடித்திருப்ப
தகுமதுதஞ் சூழ்ச்சி
யாமென்
றெரியுமனம் வெகுளாது
முகமலர்ச்சி
கொடுப்பவர்போல
லினிது நோக்கி
|