பக்கம் எண் :

சீறாப்புராணம்

986


இரண்டாம் பாகம்
 

     வரகருணைக் குரிசினும்மைத் தொடர்வதிலை

          யிகன்மறுத்து மக்க மீதிற்

     பரிவுடன்செல் குவன்புடவி விளைக்குமிடர்

          தவிர்த்திரெனப் பணிந்து சொன்னான்.

32

      (இ-ள்) அவ்வாறு நோக்கிக் குதிரையினது குளம்பைப் பூமி பற்றியிருப்பது அஹ்மதென்னும் அபிதானத்தை யுடைய முகம்ம தென்பவனின் உபாய மென்று சொல்லி எரியா நிற்கும் தன திருதய மானது கோப முறப் பெறாமல் முகத்தினது மலர்தலைக் கொடுப்பவரைப் போல இனிமையுடன் பார்த்து வரத்தினது காருண்ணியத்தை யுடைய எப்பொருட்கு மிறைவ ராகிய முகம்மதே! யான் இனி யுங்களைப் பின்பற்றி வர மாட்டேன். எனது விரோதத்தை யொழித்து ஆசையோடுந் திருமக்கமா நகரத்தின்கண் போய் விடுவேன். நீங்கள் இப் பூமியானது செய்கின்ற இத் துன்பத்தை நீக்குங்க ளென்று சொல்லிப் பணிந்து கேட்டான்.

 

2658. சத்தியமும் பொறையுமன நீங்காத

          நெறிதவறாத் தரும வேந்தும்

     புத்தமுத மொழுகுமறை விளைந்ததிரு

          வாய்மலர்ந்து புடவி நோக்கி

     யத்திரியின் றடைபடுத்தல் விடுத்தியென

          விடத்திடமண் ணதிரத் தாவி

     யொத்திசையுந் தடவிவரு மருத்தென்னத்

          தாள்பெயர்த்திட டெழுந்த தன்றே.

33

      (இ-ள்) அவன் அவ்விதங் கூற, உண்மையும், பொறுமையும் இதயத்தை விட்டும் அகலாத சன்மார்க்க மானது தவறப் பெறாத புண்ணிய அரச ராகிய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் புதிய அமிர்தமானது சிந்தா நிற்கும் புறுக்கானுல் அலீமென்னும் வேத வசனம் விளையப் பெற்ற தங்களின் தெய்வீகந் தங்கிய வாயைத் திறந்து பூமியைப் பார்த்துக் குதிரையினது மறியலை விடுவா யாக வென்று கற்பிக்க, பூமியும் அக் கற்பனைப்படி விட்டு விட, அக் குதிரை தனது பாதங்களைப் பெயர்த்துக் கொண்டு இப் புவியானது அதிரும் வண்ணம் பாய்ந்து திசைக ளெல்லாவற்றையும் தடவி வருகின்ற காற்றைப் போன்று எழும்பிற்று.

 

2659. புன்மைகவர் வஞ்சகநெஞ் சினர்க்குமறை

          தினந்தோறும் புகட்டி னாலும்

     நன்மைபய வாரெனுஞ்சொற் பழமொழியைப்

          புதுக்குவன்போ னடுக்க நீங்கிக்