பக்கம் எண் :

சீறாப்புராணம்

987


இரண்டாம் பாகம்
 

     கொன்னுனைவேல் கொடுதாக்கி முகம்மதினைத்

          தரைவீழ்த்திக் கொல்வே னென்ன

     வன்மைமனத் தொடும்புரவி தனைநடத்தி

          வெகுண்டுவந்தான் மதியி லானே.

34

      (இ-ள்) அவ்வாறு எழும்ப, புத்தி யற்றவனான அந்தச் சுறாக்கத் தென்பவன் ஈனத்தை யிச்சியாநிற்குங் கபடத்தைக் கொண்ட மனத்தை யுடையவர்களுக்கு வேதத்தினது ஒழுங்குகளைப் பிரதி தினமு முட் கொள்ளச் செய்தாலும் நன்மையைத் தர மாட்டார்க ளென்று சொல்லும் முது மொழியை நூதனப் படுத்துவான் போலத் தனது அச்சமானது நீங்கப் பெற்று முகம்ம தென்பவனைப் பயத்தைக் கொடுக்கின்ற நுனியையுடைய வேலாயுதத்தைக் கொண்டு குத்திப் பூமியின் கண் விழச் செய்து கொலை புரிவேனென்று கொடுமையை யுடைய இதயத் தோடும் தனது குதிரையைச் செலுத்திக் கோபித்துக் கொண்டு வந்தான்.

 

2660. சினந்துவெகுண் டடற்கொண் டடர்பவனை

          முகம்மதுதந் திருக்க ணோக்கி

     மனந்தனிற்புன் முறுவலொடும் வெகுளாது

          முன்போல்வன் பரியின் றாளை

     யினம்பிடித்தி டெனவுரைப்பக் கொடியவன்ற

          னுயிர்பிடுங்கி யெடுத்து வாரிக்

     கனந்தனிலுட் படுத்தியுணும் படிமுழந்தா

          டெரியாமற் கவ்விற் றன்றே.

35

      (இ-ள்) அவ்வாறு கோபித்துச் சினந்து பொருதுகின்ற குதிரையைக் கொண்டு நெருங்கா நிற்பவனான அந்தச் சுறாக்கத் தென்பவனை நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கோபிக்காமல் தங்களின் தெய்வீகந் தங்கிய நயனங்களாற் பார்த்து இதயத்தி னிடத்துப் புன்சிரிப் போடும் முன் போலக் கொடிய இக் குதிரையினது குளம்புகளை இன்னம் பிடிப்பாயாக வென்று பூமிக்குக் கட்டளையிட, பூமியானது கொடியோ னாகிய அவனது ஆவியைப் பறித்து எடுத்துக் கைகளா லள்ளிக் கதும்பி னிடத்து அகப்படுத்தி அருந்துவதைப் போன்று அக்குதிரையினது முழந்தாட்கள் வெளியில் தோற்றாத விதத்திற் கடித்துப் பிடித்தது.

 

2661. கள்ளமிகல் பழிபாவ மாறாத

          கொடியசுறாக் கத்தென் றோது

     முள்ளிரக்க மில்லாதான் முகம்மதுதந்

          திருப்பெயரை யுரைத்துக் கூவி