இரண்டாம் பாகம்
விள்ளரிய குறைசெயினும்
பொறுத்தளிப்ப
துமதுமறை மேன்மை
யன்றோ
தள்ளரிய தடைவிடுத்தி
ரிகலேனென்
றகம்வேறாய்ச்
சாற்றி னானால்.
36
(இ-ள்) அவ்விதம்
பிடிக்க, பொய்ப் பகைமை, நிந்தை, பாவமாகிய இவைகள் அகலாத கொடுமையை யுடைய அந்தச்
சுறாக்கத் தென்று கூறும் மன மிரக்க மற்றவனான அவன் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய அபிதானத்தைச்
சொல்லிக் கூப்பிட்டுச் சொல்லுதற் கருமையான குற்றங்களைச் செய்தாலும் அக் குற்றங்களை
யெல்லாம் மன்னித்துக் காப்பது உங்கள் வேதத்தினது பெருமை யல்லவா? ஆதலால் நீக்குதற் கரிய
இந்தத் தடுப்பை விட்டு விடும் படி செய்யுங்கள். யான் இனிமேல் பகைத்து வர மாட்டே னென்று தனது
மனமானது வேறாயிருக்கும் வண்ணம் கூறினான்.
2662.
இகலெடுத்து வருமமுரைத்
தவர்மறுத்தும்
வணக்கமொழி
யிசைத்தா ரென்னிற்
புகலரிய பிழைபொறுத்தங்
கவர்செயலுக்
கியல்படுத்தல் புந்தி
நேரென்
றகமதனி லகுமதுதா
நினைத்தவனி
தனைநோக்கி யாடன்
மாவின்
றகைதவிர்த்தி டெனவுரைப்ப
வெவர்க்குந்தெரி
தரத்தி ரியத்
தள்ளிற் றன்றே.
37
(இ-ள்) அவன் அவ்வாறு
கூற, அஹ்ம தென்னுந் திருநாமத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் விரோதத்தைத் தாங்கி வைராக்கியங் கூறிய
சத்துராதிகள் மீண்டும் பணிதலைக் கொண்ட வார்த்தைகளைப் புகல்வார்களே யானால் சொல்லுதற்
கருமையான அவர்களின் குற்றங்ளை மன்னித்து அவ்விடத்தில் அன்னவர்களின் செய்கைக்கு இசைவது
புத்தியினது முறைமை யென்று தங்களி னிதயத்தின் கண் சிந்தித்துப் பூமியைப் பார்த்து
நாட்டியத்தைக் கொண்ட அக் குதிரையினது தடையை ஒழித்து விடென்று கற்பிக்க, அக் குதிரையை
யாவருக்கும் தெரியும்படி சஞ்சரிக்கும் வண்ணம் வெளியிற் றள்ளிற்று.
2663.
சுடரிடத்திற் பதங்கநினை
வறியாது
வருவதுபோற் சுறாக்கத்
தென்போன்
புடவிபரிப் பதம்பிடிக்கு
முனம்வேகத்
தொடுமடுத்துப் பொருவி
லாத
|