இரண்டாம் பாகம்
வடவரைபோற் புயமுகம்ம தினைச்செகுப்ப
வேண்டுமென மனத்திற்
றாங்கிக்
கடிதினிற்கை வேல்சுழற்றி
யிமைக்குமுனம்
வரநபியும் கண்ணுற்
றாரால்.
38
(இ-ள்) அவ்வாறு தள்ள,
தீபத்தி னிடத்து விட்டிற் பறவை தனது சிந்தனையை யுணராமல் வந்து சேர்வதைப் போல, அந்தச்
சுறாக்கத் தென்னும் பெயரை யுடைய அவன் இப் பூமியானது தனது குதிரையின் தாட்களைப் பற்றுவதற்கு
முன்னர் விரைவோடும் நெருங்கி ஒப்பற்ற மகா மேருப் பருவதத்தைப் போன்ற தோள்களை யுடைய
நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக்
கொலை செய்ய வேண்டு மென்று இதயத்தின் கண் பொறுத்து விரைவில் தனது கையினிடத்துள்ள
வேலாயுதத்தைச் சுழற்றிக் கண்களை மூடி விழிக்கு முன்னர் எதிர்த்து வர, அந் நபிகட்
பெருமானவர்களும் தங்களின் நயனங்களாற் பார்த்தார்கள்.
2664.
எடுத்தகொலைத்
தொழின்மறுப்பத் தடையிருபோ
தடுப்பமனத் தினிலெண்
ணாது
தொடுத்தவன்றன் மனவலியும்
வாள்வலியு
மதிசயித்துத் தூயோன்
றூத
ரடுத்தபகை களைதறிரு
மதீனநகர்க்
கேகியபின் னாத
லென்றாற்
கடுத்திகலி யிவன்விளைக்கு
மமரறிவ
தென்கொலெனக்
கருத்துட் கொண்டார்.
39
(இ-ள்) அவ்விதம்
பார்த்த பரிசுத்தத்தை யுடையவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் றசூ லாகிய நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தான் எடுத்த
கொலைத் தொழிலை மறுக்கும் வண்ணம் இரண்டு தடவை தடை வந்து நெருங்கியும் அதை இதயத்தின் கண்
கருதாது தனது குதிரையைச் செலுத்தி வந்த அந்தச் சுறாக்கத் தென்பவனின் உள்ளத்தினது
தைரியத்தையும் வாளினது வல்லமையையுங் கண்டு ஆச்சரியப் பட்டுத் தங்களை வந்து சமீபித்த
விரோதத்தை யில்லாமற் செய்வது தெய்வீகந் தங்கிய மதீனமா நகரத்திற்குச் சென்ற பிற்பாடு
ஆவதென்றால், இந்தச் சுறாக்கத் தென்பவன் கோபமுற்று விரோதித்துச் செய்யா நிற்கும்
கலகத்தால் நாம் உணர்வ தென்னை? ஒன்று மில்லை, என்று தங்களின் மனத்தின் கண்
எண்ணினார்கள்.
|