பக்கம் எண் :

சீறாப்புராணம்

990


இரண்டாம் பாகம்
 

2665. சிந்தையினில் வெருவலற முரணாடிப்

          பின்னுமெனைத் தெறுத றேறி

     வந்தனன்றன் வீரமுங்கோ ரமுநடுங்கப்

          பற்றெனவாய் மலர்ந்து கூறக்

     கந்துகத்தின் பதநான்கு மடிவயிறு

          மங்கவடிக் காலுங் கூட்டிக்

     குந்தியசை வறவமிழ்த்திப் பதித்ததென

          வசுந்தரைவாய்க் கொண்ட தன்றே.

40

      (இ-ள்) அவ்வாறு எண்ணிப் பின்னும் மனத்தினிடத்துப் பயமானதற்றுப் போகும்படி கலகத்தை விரும்பி என்னைக் கொல்லுவதை யுள்ளத்திற் றெளிந்து வந்தவ னாகிய இந்தச் சுறாக்கத் தென்பவனின் வலிமையும் கொடுமையும் நடுங்கும் வண்ணம் பிடிப்பாயாக வென்று தங்களின் வாயைத் திறந்து கற்பிக்க, பூமியானது அந்தக் குதிரையின் நான்கு கால்களையும் அடி வயிற்றையும் அங்க வடியில் வைத்த அவனது தாளையுஞ் சேர்த்துக் குந்தியிருந்து ஆட்டமான தற்றுப் போகும் வண்ணம் தாழ்த்திப் பதித்ததைப் போன்று தன்னிடத்தில் பற்றிக் கொண்டது.

 

2666. தள்ளாத வருத்தமுடற் றோலாத

          பயமிதயத் தடத்த டாகங்

    கொள்ளாத நலிதலையந் துன்பமுடன்

          சூழ்ந்துகுடி கொண்டு தோன்ற

    விள்ளாத துணிவுமற மதமூக்க

          மிகனினைவு வெகுளி மானம்

    புள்ளாரும் வெல்வீர மனைத்துமதி

          sமறப்பப்புறம் போய தன்றே.

41

      (இ-ள்) அவ்விதம் பற்ற, சரீரத்தில் நீக்க முடியாத துன்பமும் பின்னிடக் கூடாத அச்சமும் மன மாகிய பெரிய வாவி யானது கொள்ளப் பெறாத மெலிவும் சந்தேகமும் உபத்திரவமு மாகிய இவைகள் அவனுடன் வளைந்து குடி கொண்டு விளங்க, சொல்லக் கூடாத தைரியம், அறிவு, பெருமை, உற்சாகம், பகைக் கருத்து, கோபம், அபிமானம், பட்சிகள் சேரா நிற்கும் வேலாயுதத்தினது வல்லமை யாகிய யாவும் தன் னுணர்வை மறக்கும் வண்ணம் வெளியிற் சென்றன.

 

2667. பாடலத்தின் பதமுமத னகடுமவன்

          பரடும்பதப் படியுந் தோன்றா

     தீடுபடக் கவ்வியது நபியினுரை

          மறுத்தோரை யெரிமீக் கொண்டு