இரண்டாம் பாகம்
சூடுபடு மழற்குழிவெவ்
விடப்பாந்தட்
பகுவாயின் றுளைப்பற்
பூண
வோடியற விழுங்குவதித்
தரமெனச்சொல்
வதுபோல வுணர்த்திற்
றன்றே.
42
(இ-ள்) அன்றியும், இப்
பூமி அக் குதிரையினது கால்களும், அதன் வயிறும், அந்தச் சுறாக்கத் தென்பவனின் பரடும்
பாதத்தினது அங்க வடியும் வெளியிற் றெரியாமற் றுன்பப் படும் வண்ணம் கவ்வியதாவது, நாயகம்
நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின்
வார்த்தைகளை மறுத்தோர்களை அக்கினி யானது மேற்கொண்டு வெப்பத்தைப் பொருந்திய நெருப்புக்
குழியாகிய நரகத்தினது வெவ்வியது நஞ்சை யுடைய சர்ப்பம் தனது பிளந்த வாயின் துவாரத்தை யுடைய
பற்கள் பொருந்தும்படி விரைந்து சென்று முற்ற விழுங்குவது இவ்வித மென்று கூறுவதைப் போன்று
தெரித்தது.
2668.
தலையசைத்து வால்வீசிப்
புரவிபடும்
பாடுமிரு தாளி
னோவின்
மலையமனம் வேறாகிஅக்
கைவேலை
நிலஞ்சேர்த்தி
வாயங் காந்து
சொலுமொழியீ தெனவறியா
தடிக்கடிவாய்
குழறிவிழி சுழல வாடி
யுலையிலிடு மெழுகாகி
யென்செய்வோ
மிதற்கெனநின் றுருகி
னானால்.
43
(இ-ள்) அவ்விதந்
தெரிக்க, அக் குதிரை யானது தனது சிரத்தை ஆட்டி வாலை வீசிப் படுகின்ற பாட்டாலும் தனது இரண்டு
பாதங்களினது வருத்தத்தாலும் அந்தச் சுறாக்கத் தென்பவன் ஒரு வழி படாது மனம் வேறாகப்
பெற்றுக் கரத்தின் கண்ணிருந்த வேலாயுதத்தைப் பூமியினிடத்துப் பொருந்தும் வண்ணம் போட்டு
வாயைப் பிளந்து தான் சொல்லுகின்ற வார்த்தையை இன்னதென்றுணராது அடிக்கடி வாய் குழறிக் கண்க
ளானவை சுற்றும்படி மெலிந்து இதற்கு நாம் யாது செய்வோ மென்று சொல்லி உலையின்கண் ணிட்ட
மெழுகைப் போலாய் நின்று கரைந்தான்.
2669.
அபுசகல்த னுரைதேறி
நாற்றிசைக்கும்
பரந்தவர்போ லாகா
வண்ண
மிவர்திசையிற்
கொணர்ந்திடுக்கண் விளைத்ததுநம்
sவிதிநோவ தென்கொல்
மாயாச்
|