பக்கம் எண் :

சீறாப்புராணம்

994


இரண்டாம் பாகம்
 

இரண்டு தடவை சத்திய மற்றவ னானதினால் எனக்குச் சொல்லுவதற்கு நாக்கில்லை ஒரு விநாடி நேரத்தில் எனது இரு பாதங்களும் அற்றுப் போகும். அல்லாமலும் அழகிய எனது குதிரையினது பிராணனும் எனது பிராணனும் கெடுவது சத்தியம். ஆதலால் என்னைக் கெடுப்பதும் காப்பாற்றிப் புரப்பதும் உங்களது தய வென்று கூறினான்.

 

2674. கலங்கிவலி யிழந்துரைத்த மொழியனைத்துந்

          திரண்டுதிருக் காது ளோடி

     யிலங்கியநன் மறைததும்பு மனத்துறையக்

          குறைபோக்கி யிரக்க மூறி

     விலங்கினத்தின் றளையிவன்காற் றளைவிடுத்தி

          யெனவிபுலை விடுத்த லோடும்

     பிலங்கிடந்து பிறந்தெழுந்து வருபவர்போற்

          புரவியுடன் புறப்பட் டானால்.

49

      (இ-ள்) அவன் அவ்வாறு துயரப் பட்டுத் தனது வல்லமையை யிழந்து கூறிய வார்த்தைக ளியாவும் ஒன்று கூடி நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய செவிகளில் விரைந்து சென்று பிரகாசியா நிற்கும் நன்மை பொருந்திய புறுக்கானுல் அலீ மென்னும் வேத வசனம் நிறையப் பெற்ற இதயத்தின் கண் தங்க, அவனது குற்றங்களை யொழித்துக் கருணை யானது சுரக்கப் பெற்று மிருகச் சாதியினது இனமாகிய அக் குதிரையின் காலினது தடுப்பையும் இந்தச் சுறாக்கத் தென்பவனின் பாதத்தினது தடுப்பையும் விடுவாயாக வென்று கட்டளை செய்ய, பூமியானது விட்டவுடன் அவன் பாதலத்தி லிருந்து தோற்றமாகி எழும்பி வருபவரைப் போன்று அக்குதிரையுடன் வெளிப்பட்டு வந்தான்.

 

2675. வாசியுடன் முகம்மதுதாள் பணிந்துவரு

          நெறிமீட்டு மக்க நோக்கி

     யாசடுத்த திவணிவணென் றவ்வழியும்

          விலங்கிவிரைந் தகலுங் காலைப்

     பூசலிடத் தொடர்ந்துசிலர் வருபவர்க்கு

          நன்குரைத்துப் புறம்பு காமற்

     பாசமுற வுடன்கூட்டிப் பரிவொடும்போய்ப்

          sபுகுந்தனனப் பதியின் மன்னோ.

50

      (இ-ள்) அவ்விதம் வந்த அந்தச் சுறாக்கத் தென்பவன் தனது குதிரையோடு நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல