பக்கம் எண் :

சீறாப்புராணம்

995


இரண்டாம் பாகம்
 

மவர்களின் பாதங்களிற் பணிந்து தான் வந்த பாதையிற் றிரும்பித் திரு மக்கமா நகரத்தைப் பார்த்து நமக்குக் குற்ற மானது வந்து சம்பவித்தது இவ்விடம், இவ்விட மென்று சொல்லி அந்தப் பாதைகளையும் விட்டு விலகி அகன்று செல்லும்போது, கலகஞ் செய்யும்படிப் பின்பற்றி வந்த சில சத்துராதிகளுக்கு நன்மை பொருந்திய சமாச்சாரங்களைக் கூறி அவர்கள் அப்புறம் புகுந்து செல்லாமல் அன்பானது பொருந்தும் வண்ணம் தன்னுடன் கூட்டிக் கொண்டு ஆசையோடும் தமது பதியாகிய அந்தத் திரு மக்கமா நகரத்தின் கண் போய்ச் சேர்ந்தான்.