இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்விதம்
சென்ற பரிசுத்தத்தை யுடைய நமது நாயக நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இரு மருங்குகளிலும் கொழிக்கப் பெற்ற வெள்ளிய நிறத்தை
யுடைய வண்டலும், வன நதிகளும் அலைகளானவை ததும்பப் பெற்ற சிறு பொய்கைகளினது தானங்களும்
நெருக்கமுற்று வாசனையைக் கொண்ட அழகிய முல்லை நிலத்தினது பந்தற்களும், முற்றிய தேன்
கூடுகளுடைந்து மதுவைச் சிந்தா நிற்கும் கடுக்கை மரங்களும் விளங்கும் வண்ணம் போனார்கள்.
2679.
வேயி சைத்தொனி யிருசெவி
குளிர்தர வெருவாக்
காயும் வெஞ்சின வாரணம்
பொருவகண் களிப்பத்
தோயும் வெண்டயிர் நறுநறை
நாசிக டுளைப்பப்
பாய ரிக்குல மெனநெறி
குறுகிடப் படர்ந்தார்.
4
(இ-ள்) அன்றியும்,
புள்ளாங் குழலினது கீதத்தை யுடைய ஓசையால் இரு காதுகளும் குளிர்ச்சி யடையவும், அஞ்சாது வெகுளா
நிற்கும் கொடிய கோபத்தை யுடைய சேவல்கள் ஒன்றோடொன்று பொருதுவதால் நயனங்கள்
மகிழ்ச்சியடையவும், கடைகின்ற வெண்ணிறத்தையுடைய தயிரின் நறிய வாசனை யானது மூக்கைத்
துளைக்கவும், தாவுகின்ற சிங்கத்தின் இனத்தைப் போன்று பாதையானது குறையும் வண்ணம் நடந்து
சென்றார்கள்.
2680.
நிறையுஞ் சாமையின்
போர்க்குவை வரைகளை நிகர்ப்ப
வறையு முல்லையம் பறைகட
லமலையை யவிப்பக்
குறைவில் பாலடு புகையிரு
விசும்பெனக் குலவப்
பறழின் வாய்த்தொனி
யிடையறா திருந்ததோர் பாடி.
5
(இ-ள்) அவ்வாறு செல்ல,
பொலிவைக் கொண்ட சாமைப் போரினது கூட்டங்கள் மலைகளை நிகர்க்கவும், அடிக்கா நிற்கும்
அழகிய முல்லை நில வாத்தியத்தின் ஓசை யானது, சமுத்திரத்தினது ஓசையைக் கெடுக்கவும்,
அடுப்புகளில் பாலை ஏற்றிக் காச்சுவதாற் றாழ்வில்லாது எழும்புகின்ற தூம மானது பெரிய
மேகங்களைப் போல் பிரகாசிக்கவும், ஓரிடைச்சேரி பசுக் கன்றுகளின் வாயினது சத்தமானது
நீங்காம லிருந்தது.
2681.
வந்த ரும்பெரு மொட்டக
மிழிந்தபூ பக்க
ரெந்தை யீரிளைப் பாறிமற்
றேகுவ மென்னப்
பந்த ரின்றியோர்
புறம்வெளிப் படும்பழ மனையிற்
சிந்தை நேர்ந்தவ
ணடைந்தனர் தெரிமறைச் செம்மல்.
6
|