| 23
|
என்பதுமாங்
குள்ளுருக விவரின்பக் கடல்மூழ்கி
யன்பதுவா ழில்லறத்தோ டணைக்கரிய துறவறத்தை
முன்பதுவாங் கிலமுறையான் முயன்றுதமிற் சேர்த்தமையாற்
பின்பதுவா னதிசயிப்பப் பெயர்ப்பரிய மாண்படைந்தார். |
| |
என்பதும் ஆங்கு
உள் உருக இவர் இன்பக் கடல் மூழ்கி,
அன்பு அது வாழ் இல்லறத்தோடு அணைக்க அரிய துறவறத்தை,
முன்பு அது ஆங்கு இல முறையான் முயன்று தமில்
சேர்த்தமையால்,
பின்பு அது வான் அதிசயிப்ப, பெயர்ப்பு அரிய மாண்பு
அடைந்தார். |
என்று இவ்வாறு
சூசை சொல்லவும், இவ்விருவரும் அப்பொழுதே
மனம் உருகி இன்பக் கடலில் மூழ்கினர்; அன்பென்னும் அதுவே
முதன்மையாகக் கொண்டு வாழும் இல்லறத்தோடு சேர்த்துக் கொள்வதற்கு
அரிய துறவறத்தை, முன்பெல்லாம் அப்படியொன்று இல்லாத தனி முறையால்
முயன்று தம்மோடு அவ்விடத்தில் சேர்த்துக்கொண்டு வாழ்ந்தனர். அதனால்,
பிற்காலத்தில் வானுலகமே அதனைக் கண்டு வியக்குமாறு, என்றும்
நீங்குதற்கு அரிய மாண்பு அடைந்தனர்.
அணைக்க
+ அரிய - 'அணைக்கவரிய' என்பது, 'அணைக்கரிய'
என வந்தது தொகுத்தல் விகாரம்.
பொறி
அடக்கமும் தவ ஒழுக்கமும்
- விளம், -
விளம், - மா, கூவிளம்
| 24 |
கட்புல னாதியைங்
கதவ டைக்கலால்
மட்புல னுளதெலா மனம்பு காதுயர்
விட்புலன் முதலெலா மாண்ட வேந்திவ
ருட்புலன் றனித்தடைந் துவப்பி லாளுமால். |
| |
கண் புலன் ஆதி
ஐங் கதவு அடைக்கலால்,
மண் புலன் உளது எலாம் மனம் புகாது, உயர்
விண் புலன் முதல் எலாம் ஆண்ட வேந்து இவர்
உள் புலன் தனித்து அடைந்து உவப்பில் ஆளும் ஆல். |
|