|
'வாழ்வு' என்பது,
வாழ்வின் இன்பத்திற்கு ஆகு பெயர். 'நந்து' என்ற
வினையடி எதுகை ஓசைப் பொருட்டு 'நந்தை' என நின்றது.
|
50
|
கனியோ கழையோ
கழைகான்ற கனிந்த பாகோ கோற்றேனோ
நனியோ கையினாற் கூட்டியதோர் நறவோ வுயிர்செய்
மருந்தோ வான்
நனிலோ வழங்கு மமுதென்றாற் றகுமோ வெந்தை
யருட்கிவையே
யினியோ ருவமை யீங்குண்டோ வென்றாள் வழுவா
மறைமொழி யாள். |
| |
"கனியோ? கழையோ?
கழை கான்ற கனிந்த பாகோ? கோல்
தேனோ?
நனி ஓகையினால் கூட்டியது ஓர் நறவோ? உயிர் செய் மருந்தோ?
வான்
தனிலோ வழங்கும் அமுது என்றால், தகுமோ எந்தை அருட்கு
இவையே?
இனி ஓர் உவமை ஈங்கு உண்டோ?" என்றாள் வழுவா மறை
மொழியாள். |
தவறாத வேத வாக்கைத்
தன்னிடத்தே கொண்டுள்ள மரியாள்,
"ஆண்டவன் அருளைக் கனி என்பதோ? கரும்பு என்பதோ? கரும்பு
பொழிந்த சாற்றால் அமைத்த கனிந்த வெல்லப் பாகு என்பதோ? கொம்புத்
தேன் என்பதோ? மிகுந்த மகிழ்ச்சியோடு பல பொருளும் கூட்டி
அமைத்ததொரு மது என்பதோ? உயிரைக் காக்கும் மருந்து என்பதோ?
வானுலகில் காணப்படும் அமுது தானோ என்றாலும், இவையெல்லாம்
ஒன்றாய்க் கூடியும் நம் தந்தையாகிய ஆண்டவனின் அருளுக்கு ஈடாகுமோ?
இவையே அல்லாமல் இன்னும் ஓர் உவமையாகக் கூடிய வேறு பொருளும்
இவ்வுலகில் உண்டோ?" என்றாள்.
'வான் தனிலோ
வழங்கும் அமுது' என்பதனை, 'வான்தனில் வழங்கும்
அமுதோ' எனப் பிரித்துக் கூட்டுக. 'கனி' முக்கனி எனக் கொள்க.
|