பக்கம் எண் :

முதற் காண்டம்312

                         51
தேவ வருளல் லாலிங்கண் டேடற் குரிதோர் பயனுண்டோ
மேவ நயஞ்செய் மற்றெவையும் விரும்பு கின்ற நசைதானே
யோவ வினைசெய் ததினூங்கு மொன்னா ருண்டோ
                               வுயிர்க்கெல்லாம்
பாவ மலிதற் கென்றுரைத்தான் பகைப்பேய் நடுக்கும்
                               பரிசன்னான்.
 
"தேவ அருள் அல்லால், இங்கண் தேடற்கு உரிது ஓர் பயன்
                                  உண்டோ?
மேவ நயம் செய் மற்று எவையும் விரும்புகின்ற நசை தானே?
ஓவ வினை செய்து, அதின் ஊங்ம் ஒன்னார் உண்டோ,
                                  உயிர்க்கு எல்லாம்
பாவம் மலிதற்கு?" என்று உரைத்தான் பதைப் பேய் நடுக்கும்
                                 பரிசு அன்னான்.

     மானிடர்க்குப் பகையாகிய பேயை நடுங்கச் செய்யும் தன்மை
உடையவனாகிய சூசை, "தெய்வ அருள் ஒன்றே அல்லாமல், இவ்வுலகில்
மனிதர் தேடுவதற்கு உரியதொரு பயன் வேறு உண்டோ? இன்பம் செய்கின்ற
மற்ற எல்லாவற்றையும் அடைய விரும்புகின்ற ஆசையே, உயிர்கள் பின்னர்
வருந்துமாறு தீவினைகளைச் செய்தலினால், அவ்வுயிர்களுக்கெல்லாம்
பாவங்கள் பெருகுவதற்கு அந்த ஆசையைக் காட்டிலும் மேலான பகைவர்
வேறு உண்டோ?" என்று கூறினான்.

     உரிது - 'உரியது' என்ற சொல் குறைந்து நின்றது.
 
                    52
நக்கிக் கொல்லு நச்சரவோ நயஞ்செய் துயிருண்
                               கொடுங்கோலோ,
பக்கிக் கிட்ட தோரிரையோ பயனுட் கலந்த நஞ்சதுவோ
புக்கிற் றொக்க யாவுமறப் பொறித்தீ யொளியென்
                               றெரிப்பதுவோ
விக்கிச் சிக்கு நசையென்றா ளெரிவா யைக்கும்
                               பரிசன்னாள்.