"நக்கிக் கொல்லும்
நச்சு அரவோ, நயம் செய்து உயிர் உண்
கொடுங் கோலோ,
பக்கிக்கு இட்டது ஓர் இரையோ, பயனுள் கலந்த நஞ்சு
அதுவோ,
புக்கு, இல் தொக்க யாவும் அற, பொறித் தீ ஒளி என்று,
எரிப்பதுவோ
இக்கு இச்சிக்கும் நசை?" என்றாள் எரி வாள் நயக்கும்
பரிசு அன்னாள். |
ஒளியுள்ள வானுலகத்தவர்
விரும்பும் தன்மை உடையவளாகிய
மரியாள், "கரும்பு போல் விரும்பத் தூண்டும் ஆசை, நக்கிக் கொல்லும்
நஞ்சுள்ள பாம்பு என்போமோ? நன்மை செய்வது போல் காட்டி உயிரைக்
கொல்லும் கொடுங்கோல் மன்னன் என்போமோ? கண்ணியை மறைத்துப்
பறவைக்கு இட்டு வைத்ததோர் இரை என்போமோ? பாலினுள் கலந்த நஞ்சு
என்போமோ? பொறியை உடைய தீ ஒளியென்ற தன்மையாய் உள்ளே
புகுந்து, பின் இல்லத்தில் குவிந்துள்ள யாவும் அழியுமாறு எரிப்பது போன்றது
என்போமோ?" என்றாள்.
'வான்' வானவர்க்கும்.
'கொடுங்கோல்' கொடுங்கோலனுக்கும் ஆகு
பெயர்.
| 53
|
பவமே
பழித்துப் பூவனத்திற் படர்ந்த வணங்கிற் றயிர்காத்துத்
துவமே நயனைப் பயத்துய்க்குந் துணையே தென்னின்
மன்னுயிர்க்கீங்
கவமே துயர்செய் நானெனதென் றாய விருபற் றினிதறுக்குந்
தவமே யுயிர்க்கோர் துணையென்றான் றவத்தின் பவ்வக்
கரைகண்டான். |
| |
"பவமே பழித்து,
பூவனத்தில் படர்ந்த அணங்கு இற்று உயிர் காத்து,
துவமே நயனைப் பயத்து உய்க்கும் துணை ஏது என்னின், மன்
உயிர்க்கு ஈங்கு
அவமே துயர் செய் நான் எனது என்று ஆய இரு பற்று இனிது
அறுக்கும்
தவமே உயிர்க்கு ஓர் துணை" என்றான் தவத்தின் பவ்வக் கரை
கண்டான். |
|