பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்21

பானும், பானொடு பாசறை பட்டு அழும்
வானும், வானொடு மண்ணும் இரங்கின
வேனும், ஏதும் உணர்கில மாக்களும்
கோனும் கோடணை கொண்டு இரங்காயினார்.


     
கதிரவனும் கதிரவனோடு கூடித் துன்பப்பட்டு அழும் வானமும்,
அவ்வானத்தோடு சேர்ந்து மண்ணுலகமும் இவர் நிலை கண்டு
இரங்கினவேனும், ஒன்றும் உணர்தல் இல்லாத கீழ் மக்களும் எரோதன்
என்ற மன்னனும் மட்டுமே கொடுமை கொண்டு இரங்காதிருந்தனர்.

     இரங்கார் ஆயினார் என்பது 'இரங்காயினார்' என்று இடையே
குறைந்து நின்றது.

பைதிர நீங்கு படலம் முற்றும்

ஆகப் படலம் 13க்குப் பாடல்கள் 1264