தனது
தெய்வத்துவத்தை மானிட உடல் கொண்டு மூடி மறைத்து
ஒருசிறுவனாய்க் காணும் ஆண்டவனின் தெய்வ மாண்புகளை எடுத்துக்
கூறும் பகுதி. இளவல்+மாட்சி எனப் பிரித்துக் காண்க.
சூசை
புலம்பல்
-
விளங்காய், கூவிளங்காய், கூவிளங்காய், தேமா
1 |
இரங்குபடர்
கானெவையு நைந்தழுதி ரைக்குந்
தரங்குபடர் வேலையிற ளம்பியலை நெஞ்சா
ரரங்குபடர் வான்றொழும ருட்குழவி யேந்திக்
குரங்குபடர் காட்டுநெறி கொள்ளவல முற்றார். |
|
இரங்குபு அடர்
கான் எவையும் நைந்து அழுது,
இரைக்கும்
தரங்கு படர் வேலையில் தளம்பி அலை நெஞ்சார்,
அரங்கு படர் வான் தொழும் அருள் குழவி ஏந்தி,
குரங்கு படர் காட்டு நெறி கொள்ள, வலம் உற்றார். |
அடர்ந்த
அச்சோலையிலுள்ள யாவும் மேற்கூறியவாறு இரங்கி
நைந்து அழுது கொண்டிருக்க, ஒலிக்கும் அலைகள் படர்ந்த கடல் போல்
தளம்பி அலையும் நெஞ்சம் கொண்ட சூசையும் மரியாளும், அரங்குகள்
நிறையக் கொண்டுள்ள வானுலகம் தொழும் அருள் படைத்த குழந்தையை
ஏந்திய வண்ணம், குரங்குகள் நிறைந்த காட்டு வழியே செல்ல முற்பட்டு,
அச்சோலையை இடப்புறமாக விட்டு, தாம் வலப்புறமாகச் சென்றனர்,
தரங்கு
- தரங்கம் என்பதன் கடைக்குறை. அரங்குகள் : "என்
தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள் பல உள்ளன," என்று இயேசுவே
கூறுவது (அரு. 14 : 2) காண்க.
2 |
பிழைக்குலம
ளிப்பவர்பி ழைப்பிடமி லார்போ
லுழைக்குலந டுக்கமென வுட்குலைய நைந்து
மழைக்குலமி டத்துநுழை மின்மருள மல்குந்
தழைக்குலமி டத்துநுழை யச்சடுதி போனார். |
|
பிழைக் குலம்
அளிப்பவர் பிழைப்பு இடம் இலார்
போல்,
உழைக் குல நடுக்கம் என உள் குலைய நைந்து
மழைக் குலமிடத்து நுழை மின் மருள, மல்கும்
தழைக் குலமிடத்து நுழையச் சடுதி போனார். |
|