பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்23

     பாவத்திற்கு ஆளான மனித குலத்தைக் காக்கக் கூடிய இவர்கள்,
தாம் பிழைத்திருப்பதற்கு இடம் இல்லாதவர்போல், மான் கூட்டத்தின்
நடுக்கம் போன்று மனம் குலைய நொந்து, மேகக் கூட்டத்தினிடையே
நுழையும் மின்னல் போல், நிறைந்த மரங்களது இலைக் கூட்டத்தினிடையே
நுழைய விரைந்து போயினர்.


                 3
இருத்தியெழு வானரச னீரடிந னைப்ப
வருத்தியெழு துன்பமுகி லார்த்துமிழ் கண்மாரி
திருத்தியெழு மாதவனு ளைந்துளையு டேற்றாக்
கருத்தியெழு மார்ந்ததுயர் கான்றினைய சொன்னான்.
 
இருத்தி எழு வான் அரசன் ஈர் அடி நனைப்ப
அருத்தி எழு துன்ப முகில் ஆர்த்து உமிழ் கண்மாரி
திருத்தி எழு மாதவன் உளைந்து, உளை உள் தேற்றா,
கருத்தில் எழும் ஆர்ந்த துயர் கான்று, இனைய
                                    சொன்னான் :

     செல்வங்களால் உயர்ந்த வானுலக அரசனாகிய குழந்தை நாதனின்
ஈரடிகளையும் நனைக்கும்படியாக, அன்பினால் எழுந்த துன்பமாகிய
மேகம் முழங்கி உமிழ்ந்த கண்ணீராகிய மழையைப் பொழிந்த வண்ணம்
எழுந்து நடந்த பெருந் தவத்தோனாகிய சூசை, மனம் வருந்தி, வருந்திய
உள்ளத்தைத் தேற்ற இயலாமல், தன் கருத்தில் எழுந்த நிறைந்த
துயரத்தைக் கக்கிய தன்மையாய் இவற்றைச் சொல்லலானான் :

                  4
விண்முழுது மேற்றுதனி வீரமுத லோனே
புண்முழுது மேற்றியபு லாலயில னோடு
மண்முழுது மொன்றுபட மல்கியமர் செய்தா
லெண்முழுது நீத்தநின தாண்மையெதி ருண்டோ.
 
"விண் முழுதும் ஏற்று தனி வீர முதலோனே,
புள் முழுதும் ஏற்றிய புலால் அயிலனோடு
மண் முழுதும் ஒன்றுபட மல்கி அமர் செய்தால்,
எண் முழுதும் நீத்த நினது ஆண்மை எதிர் உண்டோ?

     "விண்ணுலகம் முழுவதும் போற்றும் ஒப்பற்ற வீரமுள்ள முதல்வனே,
பறவைகளெல்லாம் போற்றிய புலால் நாறும் வேலை உடைய எரோதனோடு
கூடி மண்ணுலகம் முழுவதும் ஒன்று பட்டுப் பெருகி நின்று போர்
செய்தாலும், எண்ணெல்லாம் கடந்த உனது ஆண்மைக்கு எதிராக ஈடு
கொடுத்தல் உண்டோ?